உள்ளடக்கத்துக்குச் செல்

ஓதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) ஓதம்

 1. ஞானம்
 2. கடலின் நீர்மட்டத்தில் தோன்றும் ஏற்றத் தாழ்வு
  கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப எறி திரை ஓதம் தரல் ஆனாதே துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் - அகம் 350
  பெருங் கடல் முழங்க, கானல் மலர, இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர, - நற்றிணை - 117
  போதம் கொள் நெடுந் தனிப் பொரு இல் கூம்பொடு, மாதங்கம் வரு கலம் மறுகி, கால் பொர, ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே. - கம்பர் இராமாயணம்
  ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; மற்று எம்மொடு தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால்; வாழி, கடல் ஓதம்! - சிலப்பதிகாரம்: புகார்க் காண்டம்: கானல் வரி
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்- wisdom
 • ஆங்கிலம்- tide
 • ஆங்கிலம்- orchitis
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓதம்&oldid=1640746" இலிருந்து மீள்விக்கப்பட்டது