பறவைகளில் காக்கா எனப்படும் காகம் குளிக்கக்கூடியப் பறவையே...ஆனால் நீண்ட நேரம் குளிக்காமல், தண்ணீரில் உடல் முழுவதையும் சற்று நனைத்துக்கொண்டு, அப்படியும் இப்படியுமாக, தலையையும், உடலையும் உதறிக்கொண்டு/வேகமாக அசைத்து, உடனே பறந்துவிடும்...அதுபோலவே மனிதர்களில் சிலர் தண்ணீர் வசதி மற்றும் நேரம் இருந்தும், அழுக்குப்போக நன்றாகத் தேய்த்துக் குளிக்காமல், உடம்பில் தண்ணீரை விட்டுக் கழுவித் துடைத்துக்கொண்டு வந்துவிடுவர்.. இந்தச்செயலை காக்காக்குளியல் என கிண்டலாகச் சொல்வர்...அதோடு இராகமாக அவர்/அவர்களை நோக்கி, ஒரு பாட்டும் பாடுவர்...அது ஒரு சொம்புத் தண்ணீரில் உடம்பெல்லாம் குளித்தானாம்...