இந்தத் தின்பண்டம் பெரும்பாலான விழாக்களிலும், விருந்துகளிலும் பரிமாறப்படும் சுவைமிகுந்த இனிப்பு உணவு...இது கலியாணப் பூசணி/வெள்ளை பூசணிக்காயின் துருவல், சர்க்கரை, நெய், சிறிது முந்திரிப்பருப்பு மற்றும் உலர்திராட்சை ஆகிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகிறது...சுமார் ஒரு வாரம் வரை கெடாமலிருக்கும்...இதன் பிறப்பிடம் காசியாதலால் காசி அல்வா எனப்படுகிறது...