கிணற்றடிப் பிள்ளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கிணற்றடிப் பிள்ளை:
இது போன்ற சுற்றுச்சுவரில்லாத கிணற்றினருகே விளையாடும் குழந்தை
கிணற்றடிப் பிள்ளை:
இது போன்ற பாதுகாப்பற்றக் கிணற்றினருகே விளையாடும் குழந்தை
(கோப்பு)

பொருள்[தொகு]

  • கிணற்றடிப் பிள்ளை, பெயர்ச்சொல்.
  1. சொல்லுக்குச் சொல் பொருள்> கிணற்றினருகே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை/சின்னஞ் சிறுவர்
  2. தொக்கி நிற்கும் பொருள் > மிக்க கவனமும், பாதுகாப்பும்,எச்சரிக்கையுமுடைய வளர்ப்பு/கவனிப்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. word to word meaning > a child playing around an unprotected well
  2. conveying meaning> giving utmost look after, care, protection and attention

விளக்கம்[தொகு]

  • இஃதொரு பேச்சு வழக்குச் சொற்றொடர்...மிகுந்த கவனமுடன், பாதுகாப்பாக ஒரு பிள்ளையை/அல்லது நபரை கவனித்துக் கொள்வதை/கொண்டதை இந்த சொற்றொடரால் குறிப்பிட்டுச் சொல்வர்...இது 'எப்படிச் சுற்றுச்சுவரில்லாத/பாதுகாப்பற்ற கிணற்றினருகே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை/சிறுவரை ஒரு தாயானவள் மிக எச்சரிக்கையாக, கண்ணும் கருத்துமாக நொடியும் பிசகாமல் கவனித்துக்கொள்வளோ அப்படி' என்னும் நீண்ட பொருள் தரும் வாக்கியமாகும்...

எடுத்துக்காட்டு[தொகு]

  • என் மைத்துனன் தன் பிள்ளையை என்னிடம் விட்டுவிட்டு யாத்திரை சென்றுவிட்டார்...நானும் என் பிள்ளையைப்போலவே கிணற்றடிப் பிள்ளையாக, கண்ணும் கருத்துமாக அந்தக் குழந்தையைக் கவனித்துக்கொண்டேன்!...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிணற்றடிப்_பிள்ளை&oldid=1446013" இலிருந்து மீள்விக்கப்பட்டது