குறிகை
Appearance
குறிகை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குறிப்புகள், குறிப்புச்செய்திகள் கொண்ட ஒன்று.
மொழிபெயர்ப்புகள்
- signal ஆங்கிலம்
விளக்கம்
குறிகை என்பது பொதுவாக குறிப்புகள் தாங்கிய ஒன்று. மின் கருவிகளில் குறிப்புகளைத் தாங்கிய மின் குறிப்பலைகளைக் குறிகைகள் என்று கூறுதல் வழக்கம். பழங்காலத்தில் புகை மூட்டங்களை வெளிப்படுத்தியோ முரசுகள் அறைந்தோ செய்திகளை நெடுந்தொலைவு பரப்பினர். இதில் புகை மூட்டங்களும், முரசு அறைவதும் குறிகைகள். ஒரு மின் கருவி பேசும் ஒலியின் அதிர்வுகளை, மின்னலைகளாக மாற்றி, அதனைச் செலுத்தினால், அந்த மின்னலைகள் குறிகைகள். தற்காலத்தில் சாலைகளில் சிவப்பு விளக்கு எரிந்தால் ஊர்திகள் நிற்கவேண்டும், பச்சை விளக்கு எரிந்தால் ஊர்திகள் போக வேண்டும் என்பதில், நிற விளக்குகள் குறிகைகள் தருகின்றன.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குறிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +