குறிசூட்டுநர்
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- குறிசூட்டுநர், பெயர்ச்சொல்.
- இச்சொல்லானது மிகச் சரியாக குறிவைத்து இலக்குப் பிசகாமல் சுட்டுக் கொல்லும் வீரனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும்.
- இவர்கள் குறிசுடுநர், குறிசாடுநர் ஆகியோரைக் காட்டிலும் சிறந்தவர்கள் ஆவர்..
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
சொற்காலம்
[தொகு]- இச்சொல்லானது நான்காம் ஈழப்போரின் தொடக்காமான 2006 ஆண்டில் இருந்து ஈழத்தில் பயன்பாட்டில் உள்ள சொல்லாகும். Sniper என்னும் பொருளைக் குறிக்க முதன் முதலில் எழுந்த சொல் இதுவே. ஆகையால் இதற்குப் பின்னர் தமிழ்நாட்டில் எழுந்த(2012) குறிசுடுநர் என்னுஞ்சொல்லை sharpshooter என்னுஞ்ச் சொல்லிற்கு நிகரான சொல்லாக வழங்குக.
பதநெகிழ்த்தல்
[தொகு]குறி+சூட்டு+நர் = குறிசூட்டுநர்
- சூட்டு(சூடு => சூட்டு) - இச்சொல்லானது படைத்துறையில் சுடுதல்(வெப்பத்தால் கையில் சுடுதல்), சூட்டிஞ்சி ஆகிய பொருள்களை உணர்த்துகின்றன. இந்த சூட்டிஞ்சி என்பது பண்டைய காலத்தில் கோட்டைச் சுவரில் பாதுகாப்பாக பதிந்திருந்து பணைக்காமல் அம்பெய்ய பயன்படுத்தும் ஓர் கோட்டையுறுப்பாகும்.
சொல் விளக்கம்
[தொகு]- இச் சொல்லானது மிகச் சரியாக குறிவைத்து இலக்குப் பிசகாமல் சுட்டுக் கொல்லும் வீரன் என்னும் பொருளில் மிகச் சரியாக பொருந்தி வந்துள்ளமை நோக்குக.
இங்கு உள்ள சூட்டு என்னும் சொல்லை நோக்குக. இது பண்டைய காலத்தில் குறி பிசகாமல் சுடுதலைக் குறித்து தற்காலத்திலும் அதே பொருளால் ஈழத்திலும் ஆளப்பட்டுள்ளதை நோக்குக. அத்துடன் இச்சொல்தான் ஈழத்தில் தமிழர் தரப்பின் சினைப்பர்களை குறித்த சொல்லாகும்... அதாவது: மயூரன் குறிசூட்டுப் பிரிவு, செண்பகம் குறிசூட்டுப் பிரிவு. இவ்வளவு பழமையான சொல்லையே நாம் இங்கு சினைப்பரிற்கு நிகராக பயன்படுத்துதல் வேண்டும். இச்சொல்லானது தமிழீழ நிழலரசின் காலத்தில் வெகுவான பயன்பாட்டில் இருந்த சொல்லாகும். இதைத் தக்க வைத்தல் வரலாற்றை தக்க வைக்கும் செயலாகும்.
அத்துடன் இச்சொல்லிற்கு மாறாக மறைசுடுநர் என்றோ மறைந்திருந்து சுடுநர் என்றோ வழங்கலாகாது. இந்த மறைந்திருந்து சுடுநர் என்பது ஒரு சொல்லினை விளங்க வைக்கும் இரு சொற்களாகும். இது சொல்லல்ல என்பதை இது போன்ற சொற்களை உண்டாக்குபவர்கள் அறிதல் வேண்டும். அடுத்து இந்த மறைசுடுநர் என்பது பொருளற்ற சொலலாகும். குறிசூட்டுநர் ஆகியவர் மறைந்திருந்தும் சுடுவார்; எதிரியுடனான நேரடி மோதலிலும் ஈடுபடுவார் என்பதை சமரிற்கும் போரிற்கும் வேறுபாடு அறியாமல் படையியலில் சொல்லாக்குபவர் விளங்குதல் வேண்டும்.
பயன்பாடு
[தொகு]- அதிபர் ஜான் கென்னடியை மேல்மாடி சன்னலில் மறைந்திருந்த குறிசூட்டுநர் ஒருவன் குறிசூட்டு தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றான்
- (இலக்கியப் பயன்பாடு)
- நான்காம் ஈழப்போர்க் காலத்தில் வெளிவந்த ஈழத்தின் அனைத்து செய்தித் தாள்கள், போர்க்கால இலக்கியங்கள் தொட்டு இன்று வரை
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +