குறிசூட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஐக்கிய அமெரிக்க படையின் குறிசூட்டுநர் ஒருவர் பரெட் எம்82 ஐப் பயன்படுத்துகிறார்
தொலைநோக்கியால் இலக்கு வைக்கப்படுகிறது.
M24 SWS குறிசூட்டு துமுக்கி
பொருள்
  1. இச்சொல்லானது மிகச் சரியாக குறிவைத்து இலக்குப் பிசகாமல் சுடுதலைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும்.

மொழிபெயர்ப்பு[தொகு]

சொல் விளக்கம்[தொகு]

  குறி+ சூட்டுதல் = குறிசூட்டுதல்
இச் சொல்லானது மிகச் சரியாக குறிவைத்து இலக்குப் பிசகாமல் சுட்டுக் கொல்லுதல் என்னும் பொருளில் வந்துள்ளது. இச்சொல்லானது சேர்ந்தே வருதல் வேண்டும். பிரித்தால் பொருள் பிரளும்.

இச்சொல்லானது தமிழீழ நிழலரசின் காலத்தில் வெகுவான பயன்பாட்டில் இருந்த சொல்லாகும். இதைத் தக்க வைத்தல் வரலாற்றை தக்க வைக்கும் செயலாகும். மாறாக குறி பார்த்துச் சுடுதல் என்று இச்சொல்லின் பொருளை விளக்கும் படியாக சொல் அமைத்தல் கூடாது. உதற்குப் பெயர் சொல்லில்லை; உதன் பெயர் சொற்றொடர் என்பதை இவ்வாறு சொல்லாக்குபவர் அறிதல் வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் தமிழில் மொழிச் சிதைவு ஏற்படும் என்பதையும் அறிக.

(வாக்கியப் பயன்பாடு)

  • அதிபர் ஜான் கென்னடியை மேல்மாடி சன்னலில் மறைந்திருந்த குறிசூட்டுநர் ஒருவன் குறிசூட்டுதல் நடத்தி சுட்டுக் கொன்றான்
  • மாவீரர் மேஜர் மயூரன் அவர்கள் குறிசூட்டுதலில் கைதேர்ந்தவர் ஆவார்

சொல்வளம்[தொகு]

குறிசுடுதல் - குறிசாடுதல் - குறிசூட்டுநர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=குறிசூட்டுதல்&oldid=1903822" இலிருந்து மீள்விக்கப்பட்டது