குளிகுளிச்சான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

குளிகுளிச்சான்:
எனில் ஒரு வகை நெல்-- பிற வகை நெற்கதிர்களின் பொதுத் தோற்றம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குளிகுளிச்சான், பெயர்ச்சொல்.
  1. ஒரு நெல் வகை --குழியடிச்சான் நெல்
  2. ஆவணி, புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பெற்று நான்குமாதத்தில் விளையும் நெல்வகை.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a traditional paddy variety of Tamil Nadu
  2. A coarse paddy sown in Āvaṇi-Puraṭṭāci, maturing in four months

விளக்கம்[தொகு]

  • தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று...இதனிலிருந்து கிடைக்கும் அரிசி குளிகுளிச்சான் அரிசி எனப்படும்..
  • இது கடும் வறட்சியையும் தாங்கக்கூடிய நெல் வகை... மழை, ஆழ்குழாய் கிணற்றுத் தண்ணீர் பொய்த்தாலும் மகசூல் தரும் நெல்...
  • ஐப்பசி மாதத்தில் இந்த நெல்லை விதைத்து ஒரு மழை பெய்து நெல் முளைவிட்டாலே போதுமானது... அதன் பிறகு குறைந்த தண்ணீர் அல்லது ஈரப்பதம் இருந்தாலும், குழியில் கிடக்கும் நீரைக்கொண்டே துளிர்விட்டு வளரும்...
  • பயிர் தை மாதம் அறுவடைக்கு வந்துவிடும்...சுமார் நூறு நாட்களில் மகசூல் தரும் நெல் வகை...நான்கடி உயரம்வரை பொன்னிறமாக வளரும்...அரிசி சிவப்பு நிறத்தில், தடிமனாக, முட்டை வடிவில் இருக்கும்...குளிகுளிச்சான் அரிசி தாய்ப்பாலை நன்றாகச் சுரக்கச் செய்யும் குணமுடையது...குழியடிச்சான் என்றொரு பெயரும் இந்த நெல் வகைக்கு உண்டு...
"https://ta.wiktionary.org/w/index.php?title=குளிகுளிச்சான்&oldid=1470832" இருந்து மீள்விக்கப்பட்டது