கைக்கூலி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கைக்கூலி (பெ)
- நாட்கூலி
- லஞ்சம்
- அடியாள்
- கையிலே கொடுக்கும் விலைப்பொருள்
- வரதட்சணை; மணக்கூலி; மணமகனுக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் தொகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- daily wages
- bribe
- agent; underling
- cash payment
- money paid by the parents of the bride to the bridegroom
விளக்கம்
- 'கைக்கூலி'- இந்தச் சொல்லுக்கு கையூட்டு, லஞ்சம் என்ற அர்த்தமும் உண்டு. வரதட்சிணை என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு தமிழில் சரியான வார்த்தை கைக்கூலி என்பதுதான். ([1])
பயன்பாடு
- காவல்துறையில் நீதியைச் செய்பவர்கள், கைக்கூலி வாங்காதவர்கள், நிறைய பேர் இருக்கிறார்கள். ([2])
- காவல்துறை அரசின் கைக்கூலியாகச் செயல்படுகிறது.
- சீதனம், கைக்கூலி எடுக்காது திருமணம் முடியுங்கள். (சீதனம் என்ற சமூகக் கொடுமை)
- உன்னை விலைபேசி
(இலக்கியப் பயன்பாடு)
- கைக்கூலி தான்வாங்குங் காலறுவான் (தனிப் பா. i, 108, 47)
- கைக்கூலிகொடுத்துக் கொள்ளவேண்டும் (ஈடு, 4, 6, 1)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கைக்கூலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +