கொற்றவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கொற்றவை
கொற்றவை
கொற்றவை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கொற்றவை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. வெற்றிக்கு உரியவள்
  2. துர்க்கை
    (எ. கா.) முற்றவை காட்டிக் கொற்றவை பழிச்சி (பெருங். இலாவாண. 2, 31).
  3. காளி
  4. பைரவி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. Durgā, as the goddess of victory
  2. a hindu goddess of war and victory

விளக்கம்[தொகு]

1கொற்றவை-கொற்றம்+அவ்வை =கொற்றம் என்பது கொட்டத்தை அடுக்குபவள் என்றும் வெற்றி பெறுதல் முதலிய காரணத்திற்காக பாலை நில மக்களாகிய மறவர் மற்றும் எயினர் வழிபட்ட ஒரு வெற்றி தெய்வம்.

2துர்க்கை-துர்க்கம் என்பது வடசொல். இதற்கான பொருள் கோட்டை . கோட்டையில் வீற்றிருக்கும் தெய்வம் என்னும் பொருளில் துர்க்கை என்னும் சொல் அமைகின்றது.

3காளி-காளி என்னும் சொல் காலி , வெற்று , கருப்பு , காற்று என்னும் பொருளில் வழங்கப்பட்டு கரிய நிறமுடைய தெய்வம் என்றானது. [1] 4தமிழர் திணை நிலை வாழ்வியல் அடிப்படையில் ஐந்திணையில் ஒன்றான பாலை நிலக்கடவுளாக, வழிபடு தெய்வமாக கொற்றவை அறியப்படுகிறாள். 5இந்து மதத்தில் வெற்றிக்கும், போருக்கும் அதிபதியாகக் கொண்டாடப்படும் பெண் தெய்வம்...துர்கா, காளி, சக்தி எனும் பெயர்களிலும் அழைக்கப்படுகிறாள்...நவராத்திரிப் பண்டிகைச் சமயத்தில் துர்கா பூஜா என்னும் கொண்டாட்டங்கள் இந்திய வங்க மாநிலத்தில் மிக விமரிசையாக நடத்தப்படுகின்றன...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

̣̣̣̣

  1. தமிழர் மானுடவியல் - பக்த்தவத்சல பாரதி , அடையாளம் பதிப்பகம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொற்றவை&oldid=1900336" இலிருந்து மீள்விக்கப்பட்டது