துர்க்கை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--दुर्गा...து3ர்கா3 மூலம்
பொருள்
[தொகு]- துர்க்கை, பெயர்ச்சொல்.
- சிவபிரான் தேவியும் பாலைநிலத்தின் அதிதேவதையும் ஆகிய பெண் தெய்வம். (பிங். )
- பூரநாள் (திவா.)
- இந்துப் பெண்களுக்கிடும் ஒரு பெயர் துர்கா
விளக்கம்
[தொகு]- இந்து சமயத்தில் சிவபெருமானின் மனைவியான பார்வதியின் உக்கிர வடிவம் துர்க்கை...காளி என்னும் தேவதையாகவும் கருதப்படுகிறாள்...சிங்கம் அல்லது புலியின் மீது அமர்ந்தவளாய், ஆயுதங்கள் தாங்கிய எட்டு அல்லது பத்து கைகளைக்கொண்டவளாய், மகிசாசுரன் என்னும் அரக்கனை வதைப்பதுபோல் பொதுவாக சித்தரிக்கப்படுகிறாள்...துர்க்கை பாலைநிலத்தின் அதி தேவதையாகவும் கொண்டாடப்படுகிறாள்...இந்து மதத்தில் இந்த தெய்வத்தை முதல் தெய்வமாகக் கொண்டாடும் சாக்தம் என்ற ஒரு கிளைச்சமயமே உள்ளது...வங்கமொழி பேசும் இந்துக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தபெண் தெய்வம்...ஆண்டுதோறும் துர்கபூஜ என்று நவராத்திரியின்போது வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும் உலகின் எந்தப் பகுதியிலிருந்தாலும் கொண்டாடிக் களிப்பர் வங்க மக்கள்...
- இந்து பஞ்சாங்கத்தில் பதினோறாம் நட்சத்திரமான பூரம் உள்ள நாள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- durgā, goddess of the desert tract, consort of Šiva
- a day having the 11th nakṣatra of hindu calendar---puram
- one of female names amongst hindus.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- Pages with image sizes containing extra px
- தமிழ்-படங்களுள்ளவை
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- பிங். உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- சிலப். உள்ள பக்கங்கள்
- திவா. உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- நான்கெழுத்துச் சொற்கள்
- புறமொழிச் சொற்கள்
- தமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்
- இறையியல்
- இந்துவியல்
- சைவம்
- பார்வதியின் வேறு பெயர்கள்