சாபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


சாபம் (வி)

பொருள்
  1. சபித்துக் கூறும் மொழி; பழிப்புரை, தெறுமொழி
  2. வில்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • சாவம் -> சாபம்

சாவும்படி மொழிதல் சாவம். சாவமே சாபமாகிற்று.

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ‘தன் கணவன் கள்வன் அல்லன்’என நிரூபித்த கண்ணகி, மதுரை எரியும்படி சாபம் இட்டாள் (கொற்றவை மதிப்புரை, ஜெயமோகன்)
  • ஐயோ, மாமி! கோபப்பட்டு அவரை எதுவும் உங்க வாயாலே சொல்லிடாதீங்க. சாபம் கொடுத்துராதீங்க. பெரியவங்க வாக்குப் பலிச்சுடும். அவர் எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும். ஆனா அவருக்கு எந்தக் கெடுதலும் வரக் கூடாது (ஆப்பிள் பசி, சாவி)
  • தடுப்பருஞ் சாபம் (கம்பராமாயணம், அகலிகை)
  • வில் என்ற பொருள்படும்படி: "குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி" (புறநானூறு, 77)

ஆதாரங்கள் ---சாபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாபம்&oldid=1904608" இருந்து மீள்விக்கப்பட்டது