சாமவேதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சாமவேதம்:
படம்: இந்துச் சமயச் சின்னம்
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--सामवेद--ஸாமவேத3---மூலச்சொல்

பொருள்[தொகு]

  • சாமவேதம், பெயர்ச்சொல்.
  1. நான்கு வேதங்களுள் கீதநடையான மூன்றாம் வேதம் (திவா.)
  2. இந்துக்களின் நான்கு மறைகளில் ஒன்று

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. samaveda, one of four basic scriptures of hindu religion called vedas

விளக்கம்[தொகு]

  • சாமவேதம் என்பது இந்து மதத்தின் அடிப்படையும், மிகப்புனிதமுமான வேதங்கள் எனப்படும் நான்கு பழம்பெரும் நூற்களில் ஒன்று... மற்ற மூன்று வேதங்கள் ரிக் வேதம், யசுர் வேதம் மற்றும் அதர்வண வேதங்கள் ஆகும்...சாமவேதத்தின் நடையே சங்கீத வழியிலானது...சமஸ்கிருத மொழிக்கு முன்னோடியான வேதமொழி எனப்பட்ட மொழியிலானது...சாமவேதம் சமயச் சடங்குகளைச் செய்யும் வழிமுறைகளைச் சொல்லி, அதற்குண்டான மந்திரங்களையும் தெரிவிக்கிறது...இந்து கடவுட்கட்கு ஏற்ப துதிக்கள், பாடல்கள், மந்திரங்கள் அடங்கியதான சாமவேதம், இந்திய இசை மற்றும் நடனக் கலை சம்பிரதாயங்களுக்கு அடிப்படையானதாகக் கருதப்படுகிறது...முதல் வேதமான ரிக் வேதத்தின் பலப் பகுதிகளையும் உள்ளடக்கியதால், வேதங்களின் வரிசையில் மூன்றாவதாகக் கொள்ளப்பட்டாலும், முக்கியத்துவத்திலும், புனிதத் தன்மையிலும் முதல் வேதமான ரிக் வேதத்திற்கு இணையாக, இரண்டாமிடத்தில் வைத்துப் போற்றப்படுகிறது...இலங்கை மன்னன் இராவணன் சாமவேதத்தை இசைத்தே சிவபெருமானை மயக்கி, மகிழ்வித்து வரங்களைப் பெற்றான் என்பர்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாமவேதம்&oldid=1455978" இலிருந்து மீள்விக்கப்பட்டது