இந்து தெய்வ விக்கிரங்களைச் சந்தனத்தை அரைத்தக் குழம்பினால் முழுவதும் பூசி/மூடி வழிபடுவது ஒரு சமய நிகழ்ச்சி...இதற்கு வைணவச் சொல்லில் சாற்றுபடி என்பர்...பெருமாள் விக்கிரங்களுக்கு அரைக்கும் சந்தனத்தில், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ மற்றும் துளசிக்கட்டைகளையும் சேர்த்து அரைப்பது சம்பிரதாயம்...இந்த நிகழ்வை சந்தனாபிசேகம் மற்றும் சந்தனக்காப்பு என்றும்கூடச் சொல்வர்...