சந்தனம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - சந்தனம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- இறைவனின் வழிபாட்டிற்கு உகந்தப் பொருட்களில் ஒன்று சந்தனம்...இறை விக்கிரகங்களை அலங்கரிப்பதற்கும், முழுக்காட்டவும், தீர்த்த பிரசாதங்களில் போடவும் இன்னும் அநேக தெய்வீகக் காரியங்களிலும் பயனாகிறது...
- சந்தனம் சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறது...சந்தனத்தில் மூன்று வகையான பேதங்கள் உண்டு...அவற்றில் சிவப்பு நிறச் சந்தனமே மருந்துகளுக்கு உத்தமம்...மஞ்சள் நிறம் கொண்டவை மத்திமம்...வெள்ளை நிறமுடையது அதமம் ஆகும்...
- மருத்துவ குணங்கள்...
- சந்தனம் வெப்பமும் குளிர்ச்சியும் உடையது...இதை முறையாகப் பயன்படுத்தினால் நல்ல விவேகம், மனமகிழ்ச்சி, இலட்சுமி விலாசம், சருமத்தாது ஒளி, பெண்களிடம் விருப்பம் உண்டாகும்...சீழ் பிரமியம் போகும்...
- மேலும் வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றங்களையும், சித்தப்பிரமை, ரூட்சை, ஒழுக்குப்பிரமேகம், நாவறட்சி, உட்சூடு, நமைச்சல் இவைகளையும் போக்கி, உடம்பிற்கு வலுவைக் கொடுக்கும்...இதைக்கொண்டு முகப்பூச்சுப்பொடி,குளிக்க சவர்க்காரம்,சந்தனாதித் தைலம், பஞ்சகற்பம், மனோமகுட தூபப்பொடி,சந்தன எண்ணெய் போன்ற அநேக உபப்பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன
- நெற்றியில் சந்தனம் இட்டார் (He applied sandal paste on his forehead)
- சந்தனம் அகிலி னோடு தடமலைச் சாரல் வீட்டில் (திருநள்ளாற்றுப் புராணம்)
- அரைத்த சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெற்றியிலே (பாடல்)
{ஆதாரம்} --->