சிந்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


சிந்தி (வி)

பொருள்
 1. நினை
 2. மனனம் பண்ணு
 3. தியானி
 4. கேட்டபாடத்தை மீண்டும் நினைத்துப் பார்
 5. விரும்பு
 6. கவலைப்படு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. think of, consider
 2. reflect, ponder
 3. meditate
 4. revise lessons
 5. desire
 6. To be concerned, sorrowful
பயன்பாடு
 • பணம் எப்படிச் சேர்ப்பது என்று ஓயாமல் சிந்தித்து வந்தான் (அரசூர் பஞ்சாயத்து, கல்கி)
 • நடந்ததையெல்லாம் ஆர அமரச் சிந்தித்து நிதானமாக எனக்குச் சொல் (பாண்டிமாதேவி, நா.பார்த்தசாரதி)
 • போகும்போதும் வரும் போதும் பாடங்களின் குறிப்புகளைச் சிந்தித்து நடப்பேன். (அகல் விளக்கு, மு. வரதராசனார்)
 • அவர்கள் எதற்காகத் தன்னைப் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்று தன்னால் ஆனமட்டிலும் சிந்தித்து முடிவு செய்ய முயன்றான் அவன் (பாண்டிமாதேவி, நா.பார்த்தசாரதி)
 • கழிந்ததைக் குறித்துச் சிந்திக்கலாகாது.

(இலக்கியப் பயன்பாடு)

 1. சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை (நல்வழி, ஔவையார்)
 2. சந்திப்போமா? நாம் சந்திப்போமா? தனிமையில் நம்மைப் பற்றிச் சிந்திப்போமா?(பாடல்)
 3. மறுமையைச் சிந்தியார் சிற்றறிவினார் (நாலடி. 329)
 4. பொதுவியல்பு . . . கேட்டல் சிந்தித்தலென்னும் இருதிறத்தா னுணரப் படும் (சி. போ. சிற். பாயி. பக். 4)
 5. நம்மிறுதி சிந்தியாதவர் யார் (கம்பரா. யுத்த. மந்திரப். 106)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிந்தி&oldid=1969133" இருந்து மீள்விக்கப்பட்டது