உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


படிமம்:xx
சிறுமை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிறுமை   (பெயர்ச்சொல்)

 1. அளவால், உருவத்தால், பண்பால் குறுகியது, சிறியது என்னும் தன்மை.
 2. தலைகுனிவு (பெருமை கெட்டுவிட்டதால் ஏற்படும் தாழ்வு)
 3. இன்மை
 4. எளிமை
 5. வறுமை
 6. துன்பம்
 7. கீழ்மை
 8. நோய்
 9. குறும்பு
விளக்கம்
 1. சிறு, சிறிய என்பதன் தன்மை.
பயன்பாடு

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.           (திருக்குறள்)

[மு.வரதராசனார் உரை: ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை. (சிறுமை = துன்பம்)]


மொழிபெயர்ப்புகள்
 • small, smallness (ஆங்கிலம்)
 • hardship (ஆங்கிலம்)
 • -

2 உரிச்சொல்

[தொகு]
பொருள்
நோய்
இலக்கியம்
"சிறுமை உறுபவோ செய்பு அறியலரே" (நற்றிணை 1)
"சிறுசொல் சொல் சொல்லிய சினங்கெழு வேந்தர்" (துறநானூறு 72)
இலக்கணம்
"பையுளும் சிறுமையும் நோயின் பொருள" - தொல்காப்பியம் 2-8-44

சொல்வளம்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறுமை&oldid=1968589" இலிருந்து மீள்விக்கப்பட்டது