தனலட்சுமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

தனலட்சுமி:
வாழ்நாளெல்லாம் செல்வச்செழிப்புடனிருக்க, திருமகளின் பூசனைக்குரியத் தோற்றம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धनलक्ष्मी--த4நலக்ஷ்மீ--மூலச்சொல்
  • தனம் + லட்சுமி

பொருள்[தொகு]

  • தனலட்சுமி, பெயர்ச்சொல்.
  1. செல்வத் திருமகள்
  2. திருமகளின் ஒரு தோற்றம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Dhanalakshmi..an image of goddess lakshmi, wife of lord vishnu,one of her eight appearances--hindu religion

விளக்கம்[தொகு]

  • திருமாலின் பத்தினியாகிய திருமகள் மக்களுக்கு நல்கும் வரங்களின் தன்மைக்கேற்றவாறு, எட்டு தோற்றங்களில் காட்சியளிக்கிறாள்...ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அவளருள் வேண்டி பூசிக்கும் பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கண்களைமூடிப் பிரார்த்திக்க, இத்தகைய தனித்தனித் தோற்றங்கள் அவசியமாகின்றன...அவ்வகையில், வாழ்நாள் முழுவதும் செல்வச் செழிப்புடன் இருக்க, பூசனைக்குரிய திருமகளின் உருவத்தோற்றம் தனலட்சுமி ஆகும்...சமஸ்கிருதத்தில் 4ந-धन எனில் செல்வம் எனப் பொருள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தனலட்சுமி&oldid=1450971" இருந்து மீள்விக்கப்பட்டது