தறுகண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தறுகண்,பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  1. valour, bravery, fearlessness ஆங்கிலம்
  2. ...


இலக்கிய மேற்கோள்கள்[தொகு]

       தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்
       பேய்த்தகை கொண்டோர் பெருமையும் வன்மையும்
       ஞானமும் அறியா நவைபுரி பகைவர்

      மெல் தினை மேய்ந்த தறுகண் பன்றி
      வன் கல் அடுக்கத்து துஞ்சும் நாடன்

     அரு புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற
      தறுகண் பன்றி நோக்கி கானவன்
      குறுகினன் தொடுத்த கூர் வாய் பகழி

      அழி பசி வருத்தம் வீட பொழி கவுள்
     தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின்
       சிறு கண் யானையொடு பெரு தேர் எய்தி

     செம்கண் மாறு எழிக்கப் பட்ட வலம் புரிந்து உருவம் கொண்ட
     சங்குவாய் வைத்து நம்பன் தெழித்தலும் தறுகண் ஆளி
     பொங்கிய முழக்கின் வேழப் பேரினம் புலம்பினால் போல்

  • பதினோராம் திருமுறை;-

     செந்தறுகண் கேழல் திறம்புரிந்து -வந்தருளும்
     கானவனாம் கோலம்யான் காணக் கயிலாயா

     ஈசன்விடு சரம் மாரியும், எரிசிந்துறு தறுகண்
     நீசன்விடு சர மாரியும் இடை எங்கணும் நெருங்க,
     தேசம் முதல் ஐம்பூதமும் செறிவுற்றன செருவில்

    சங்கரன் தொல் படை தறுகண் ஆலமும்
    புங்கவர் படைகளும் பூத ராசியும்

    பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
    ஊராண்மை மற்றதன் எஃகு. குறள்-773

    மணி இலாக் குஞ்சரம் வேந்து ஊர்தல் = இன்னா இன்னா
    துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை = இன்னா இன்னா
    பணியாத மன்னர் பணிவு = இன்னா இன்னா இன்னா
 *பழமொழி;-
    உறுகண் பலவும் உணராமை கந்தா
    தறுகண்மை ஆகாதாம் பேதை தறுகண்
    பொறிப் பட்ட ஆறு அல்லால் பூணாது என்று எண்ணி


( மொழிகள் )

சான்றுகள் ---தறுகண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தறுகண்&oldid=1233952" இலிருந்து மீள்விக்கப்பட்டது