திரிசங்கு நிலை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திரிசங்கு நிலை(பெ)
- இரண்டுக்கு இடையில் மாட்டி, இருபக்க வாய்ப்புகளையும் இழந்து நிற்கும் திண்டாட்ட நிலை
- அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் நிலை
- இரண்டுங்கெட்டான் நிலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- state of being stuck in the middle, unable to make gainful progress either way
விளக்கம்
- தனது பூதவுடலுடன் சொர்க்கம் போக எண்ணிய திரிசங்கு என்னும் அரசன், அதை அடையும் முயற்சிக்கு யாரிடமிருந்தும் உதவி கிடைக்காததோடு, கூடவே விகார ரூபத்தையும் சாபமாக பெற்றான். அவனுக்கு விசுவாமித்திரர் உதவ யாகம் நடத்துகிறார். அவனை அப்படியே சொர்க்கத்துக்கு மேலே அனுப்ப, இந்திரனால் அவன் கீழே தள்ளப்பட, கோபம் கொண்ட விஸ்வாமித்திரர் அவனை ஆகாயத்திலேயே அந்தரத்தில் நிறுத்தி அவனை சுற்றி இன்னொரு சொர்க்கம் படைக்க ஆரம்பிக்கிறார். பயந்துபோன தேவர்கள் அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டு, அந்த சொர்க்க நிர்மாணம் ஆனவரை அப்படியே விட்டுவிட கெஞ்சுகிறார்கள். அந்த சொர்க்கம்தான் திரிசங்கு சொர்க்கம், அதாவது பூமியும் இல்லை, சொர்க்கமும் இல்லை. ([1])
பயன்பாடு
- ஒரு தலைமுறை குழந்தைகளை ஆங்கிலப் புலமையும் இன்றி, தமிழ்ப் புலமையும் இன்றி திரிசங்கு நிலையில் வைத்திருக்கிறோம். (தமிழ்வழிக் கல்வியும் கலைச்செல்வங்களும், காசிராஜன், தினமணி, 26 ஏப்ரல் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- திண்டாட்டம் - இரண்டுங்கெட்டான் நிலை - திரிசங்கு சொர்க்கம் - திரிசங்கு - # - # - #
ஆதாரங்கள் ---திரிசங்கு நிலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +