உள்ளடக்கத்துக்குச் செல்

துவளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • துவளுதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  1. துவள்தல்
  2. ஒசிதல் (சூடாமணி நிகண்டு)
    (எ. கா.) பொலிவில துவள (கம்பரா. பூக்கொய். 11)
  3. நெளிதல் (சங். அக.)
  4. வாடுதல்
    (எ. கா.) கண்ணார் தழையுந் துவளத்தகுவனவோ(திருக்கோ. 112)
  5. கசங்குதல்
    (எ. கா.) புதிய ஆடை துவண்டுவிட் டது
  6. துடித்தல்
    (எ. கா.) பெரு நீரறச் சிறுமீன் றுவண்டாங்கு (திருவாச. 6, 26).
  7. வருந்துதல்
    ((எ. கா.) சோறுகூறை யின்றியே துவண்டு(தேவா. 119, 3).
  8. ஒழிதல்
    ((எ. கா.) வெஞ்சுரஞ்சென்றதெல்லாம் . . . பூவணைமேலணையாமுன் றுவளுற்றதே (திருக்கோ.351)
  9. அடர்தல்
    (எ. கா.) தாழை துவளுந் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே (திணைமாலை. 59)
  10. இறுகுதல்
    ((எ. கா.) பாலைத் துவளக் காய்ச்சினான்
  11. ஒட்டுதல் (W.) ; புணர்தல்
    ((எ. கா.) துடியிடையார் கணவருடன் துவளும்போது (அருணா. பு. திருக்கண்.)
  12. மெல்லிதாயிருத்தல் (சங். அக.) (செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  13. தொடுதல். (பிங். )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be flexible, supple, as a tender tree
  2. To bend, shrink, twist,warp, as boards in the sun
  3. To fade, wither, as plants under scorching sun
  4. To become rumpled, as a new cloth
  5. To quiver, tremble
  6. To be distressed
  7. To disappear
  8. To be dense, close
  9. To be thick in consistency, as milk
  10. To be sticky; to adhere, as oil
  11. To unite sexually
  12. To be thin
  13. To touch



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + துவளுதல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவளுதல்&oldid=1275839" இலிருந்து மீள்விக்கப்பட்டது