இஃதொரு பேச்சு வழக்குச் சொற்றொடர்...இந்துச் சைவக் கோயில்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்களின் சிலைகளை ஒரு பீடத்தின்மீது அமைத்து வைத்திருப்பர்...பக்தர்கள் இந்த நவகிரகப் பீடத்தை சுற்றி வலம் வந்து தொழுவது ஒரு வழிபாட்டு முறையாகும்...இந்த பீடத்தில் ஒன்பது சாமிச் சிலைகள் அமைந்திருந்தாகும், அவை ஒன்றுக்கொன்று கண்ணோடுக் கண்,நேரிடையாகப் பார்த்துக் கொள்ளாதவாறுதான் அமைக்கப்பட்டிருக்கும்...இந்த அமைப்பை கிரகங்களுக்கிடையே ஒற்றுமையில்லாததைப்போல பாவித்து/எடுத்துக்கொண்டு, சமூகத்திலும் ஒற்றுமையில்லாத் தன்மையைக் குறிக்க நவகிரகம்போல எனும் சொற்றொடரைப் பயன்படுத்துவர்!...
காளமேகத்திற்கு ஐந்து பிள்ளைகளும், இரண்டு பெண்களும் இருக்கிறார்கள்!... இருந்தாலும் என்ன பிரயோசனம்?...ஒருவருக்கொருவர் எப்போதும் சண்டைப் பிடித்துக்கொண்டு நவகிரகம்போல சற்றும் ஒற்றுமையில்லாமல்,அமைதியில்லாமல் இருக்கிறார்கள்...காலமேகத்தின் பாடுதான் பெரும்பாடாக யிருக்கிறது!!...