நாமஞ்சாத்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

நாமஞ்சாத்துதல்:
-திருமண் தரித்தல் என்றால் இந்தப்படங்களின் நடுவிலிருக்கும் முக்கோட்டுச் சின்னத்தை வைணவர்கள் தங்கள் நெற்றியில் அணிந்துக் கொள்ளுதல்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 • நாமம் + சாத்து + தல்
 • சமசுகிருதம் + தமிழ் கலப்புச்சொல்---नाम--நாம-(பெயர்) + சாத்துதல்

பொருள்[தொகு]

 1. பேரிடுதல்
 2. ஏமாற்றுதல்
 1. திருமண் தரித்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 • transitive verb
 1. to give name to--(infants)
 2. to deceive
 • intransitive verb
 1. to wear the Vaiṣṇava tridental mark

விளக்கம்[தொகு]

 • பிறந்தக் குழந்தைகளுக்கு விழாவெடுத்து சடங்கின் நெறிமுறைகளின்படி பெயர் கொடுப்பதும், ஸ்ரீவைணவர்கள் படத்தில் காட்டியுள்ளபடி தங்கள் கிளைச் சமயத்திற்கானச் சின்னத்தை, வென்ணிற மண் மற்றும் செந்நிற ஸ்ரீசூரணப்பொடிகளால் தங்கள் நெற்றியில் அணிந்துக்கொள்ளுவதும் நாமஞ்சாத்துதல் எனப்படுகிறது...
 • நாமம் என்பது ஒருவகை வெள்ளைநிற மண் ஆகும்...பணம், பொருள் போன்றவைகளை, மீண்டும் தந்துவிடுவதாகக்கூறி, ஒருவரிடமிருந்துப்பெற்றுக்கொண்டு அவ்வாறு தராமலேயே ஏமாற்றி விடுதலையும் நாமஞ்சாத்துதல் என்றேக் குறிப்பிடுவர்...மண் போடுதல், மண்ணால் அடித்தல் என்றெல்லாம் சொன்னால் அழித்தல் எனப்பொருட்படும்...இவ்வகையில் மீண்டும் தந்துவிடுவதாக உறுதிக்கூறி, பிறகு அந்தப் பேச்சை அழித்து, வாங்கியவைகளைத் தராமல், கொடுத்தவரின் நெற்றியிலேயே (முகத்திலேயே) நாமம் (மண்) சாத்துதல் என்பதாகக் கொள்ளலாம்!?


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாமஞ்சாத்துதல்&oldid=1395681" இருந்து மீள்விக்கப்பட்டது