நெரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


படிமம்:A woman demonstrating how to put on a sari (7).jpg
இடையில் சொருகப்படும் சேலை மடிப்பு
பொருள்

நெரி(வி)

  1. நன்றாக அழுத்து (கழுத்தை நெரி)
  2. நொறுக்குதல்
    தலைபத்து நெரியக் காலாற் றொட்டானை (தேவா. 17, 7)
  3. நசுக்குதல்.
    கழை நெரித்து வீழ்த்த சாறு (சேதுபு. திருநாட். 78)
  4. கையால் தானிய முதலியவற்றை நிமிண்டுதல்
  5. துன்பமுதலியவற்றால் மகளிர் கைவிரல்களை அழுத்திச் சேர்த்தல்.
    கையைக் கையினெரிக்கும் (கம்பரா. நகர்நீங்கு.11)
  6. கைவிரல்களைச் சுடக்குதல்
  7. நிலைகெடச்செய்தல்
  8. சாமர்த்தியமாய் நடத்துதல்
  9. நெருங்குதல்.
    எரிப்பூம் பழன நெரித்து (புறநா. 249)
    நெரிமுகைக் காந்தள் (பரிபா. 14, 13)
  10. குவித்தல்
  11. வளைதல்.
    புருவம் நெரிந்தேற (திவ். பெரியாழ். 3, 6, 2)

(பெ)

  1. சீலையின் கொய்சகம். (யாழ். அக.)
  2. சொரசொரப்பு.
    நெரி புறத்தடற்றுவாளும் (சீவக. 2517).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - neri
(verb)
  1. strangle, strangulate, choke
  2. To break to pieces
  3. To crush, press, squeeze
  4. To rub or crush with the hand, as ears of grain
  5. To break the knuckles, as women in distress
  6. To crack, as the fingers
  7. To rout
  8. To acquit oneself creditably
  9. To approach
  10. To crowd together
  11. To arch, curve, bend
(noun)
  1. Close and short plaits of cloth in wearing
  2. Roughness

சொல்வளம்[தொகு]

நெரி - நெரிசல்
நெரி, நெறி
"https://ta.wiktionary.org/w/index.php?title=நெரி&oldid=1400571" இலிருந்து மீள்விக்கப்பட்டது