பகுப்பு பேச்சு:ஓரெழுத்துச் சொற்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • "ஆங்கிலத்தில் (a) மற்றும் (i) மட்டுமே, என்பதனை அறியவும்." என்னும் தொடரை நீக்கிவிட்டேன். ஏனெனில், இது தவறான கருத்து. சற்றேறக்குறைய தமிழில் உள்ளது போன்ற வரையறையைக் கொண்டால், ஆங்கிலத்திலும், yea, go, bow, do, bay ஆகிய பல சொற்களும் "ஓரெழுத்துஒரு மொழியாகும்" தமிழில் எழுத்து என்பதன் வரையறையும், ஆங்கிலத்தில் ஓரெழுத்து என்னும் வரையறையும் ஒன்றல்ல. தமிழில் ஓரெழுத்து என்பது ஒருவகையான ஓரசை என்பது போன்ற பொருள் உடையது. தமிழில் கோ, வா என்பன ஓரெழுத்தாகக் கொண்டால், ஆங்கிலத்தில் go, bay என்பனவும் அப்படிப்பட்டனவே (ஒலியடிப்படையில்). மேலும் ஆங்கிலத்தை ஒப்பிட வேண்டிய தேவை இல்லை (இந்தப் பக்கத்தில்). எனவே நீக்கிவிட்டேன்.--செல்வா 18:36, 9 மே 2010 (UTC)[பதிலளி]
  • http://ta.wikipedia.org/s/sfe என்பதன் சொற்களையும் படத்தோடு இணைக்க வேண்டும்.-- உழவன் +உரை.. 17:00, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]