உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:மருத்துவகுணம் கொண்ட தாவரங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

பகுப்பு:மூலிகைகள் என்ற பகுப்பு, 2009 ஆம் ஆண்டு இதற்கு முன்னரே உருவாக்கப்பட்டுள்ளதால், அதனோடு இணைக்கலாமென்று உள்ளேன்.இதில் இரண்டே தாவரங்கள் தான் உள்ளன. அதில் 30க்கும் மேற்பட்ட தாவரங்கள் உள்ளன. பிறரின் கருத்தறிய ஆவல்-- உழவன் +உரை.. 05:21, 4 சனவரி 2013 (UTC)Reply

நிச்சயமாகச் செய்யலாம்...தாவரம் என்றாலே பூமியில் முளைப்பது என்ற பொருளும் உள்ளது...அப்படிப் பார்த்தால் மரம், செடி, கொடி, புல், பூண்டு அவற்றின் பகுதிகள் அனைத்துமே தாவரம் ஆகும்...விக்சனரியில் மரம், செடிகள், மூலிகைகள், மருத்துவச் செடி, மருத்துவகுணம் கொண்ட தாவரங்கள், தாவரங்கள் என்னும் பகுப்புகள் இருப்பதாகத் தெரிகிறது...பழங்கள், காய்கறிகள், பூக்கள் என்னும் பகுப்புகளும் உள்ளன...என் அபிப்பிராயப்படி மரங்கள், செடிகொடிகள், புல்பூண்டுகள், மூலிகைகள், பழங்கள், காய்கறிகள் என்னும் பகுப்புகள் இருந்தாலே போதும்..மருத்துவ குணம் இந்த எல்லாப் பகுப்புகளிலுமுள்ளது...உணவாக அல்லாமல்,மருத்துவத்திற்கு மட்டுமே பயன்படும் தாவரங்களை அது மேற்சொன்ன எந்த பகுப்புகளிலடங்கினாலும் மூலிகைகள் என்றே விக்சரியைப் பொறுத்தமட்டும் பொருள் தற்காலிகமாகக் கொள்ளலாம்...மேலும் இலை, வேர், பட்டை ,பூ, பால், பிசின். காய், கனி போன்ற ஒரு தாவரத்தின் பகுதிகளைத் தனித்தனியாகப் பதிவேற்றும்போது அவை அந்தந்த மரம், செடிகொடிகளின் பகுப்புகளிலேயே போய்ச் சேரும்...இந்த வகையில் ஒரு தாவரத்தின் பெயரைப் பதிவேற்றினால் அதற்கு ஒன்றுக்குமேல் பகுப்பிடல் அவசியமாகும் என்பதைக் கவனிக்கவும்...உதாரணமாக வேப்பமரம் என்றால் அது மரம், மூலிகை என்னும் இரு பகுப்பிடலுக்குள் அடங்கும் என்பதோடு அதன் இலை, பூ போன்றவைகளும் அங்கேயே சேரும்...இல்லையென்றால் மருத்துவத் தாவரப் பொருட்கள் என்னும் ஒரு தனி பகுப்பை உருவாக்கவேண்டும்...இவையெல்லாம் என் தனிப்பட்டக் கருத்துக்களே! --Jambolik (பேச்சு) 18:56, 5 திசம்பர் 2013 (UTC)Reply
  • மிக ஆழமான தங்கள் எண்ணங்களால், எனது சிந்தனை விரிவாகியது. நன்றி. பகுப்பிடலில் நிறைய மேம்பாடு அவசியம். நான் அதனை அதிக அளவில் செய்யத்தேவையான நிரலாக்கம் பற்றி எண்ணுகிறேன். அது சொல்லொன்றை பதிவேற்றிய பிறகே அதிக அளவில் செய்ய, என்னால் இயலும். பதிவேற்றும் போதே முடிந்தவரை, பகுப்பு செய்ய போராடுகிறேன். சென்னைப்பேரகரமுதலியின் தரவுகள் மிகப்பழையது என்பதால், அதன் களைகளை எடுக்கவே அதிக நேரம் செலவாகிறது. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 01:00, 6 திசம்பர் 2013 (UTC)Reply