படி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

Nadu

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • படி, பெயர்ச்சொல்.
  1. அளக்கப் பயன்படும் ஒரு அளவை = 8 ஆழாக்கு. எ.கா. ஒரு படி அரிசி.
  2. மேலே ஏறுவதற்குப் பயன்படும் படி. இதனை படிகட்டு என்றும் கூறுவர். எ.கா. மாடிப் படி. ஆங்.
  3. நூலைப்படிப்பது. எ.கா. இனியன் திருக்குறளை தலைகீழாகப் படித்துள்ளான் படி. ஆங்.
  4. படியெடுத்தல். எ.கா. ஒரு செய்தியைப் படியெடுத்தல்.
  5. நிலை
  6. தன்மை
  7. அங்கவடி
  8. தராசின் படிக்கல்
  9. நூறு பலங் கொண்ட நிறையளவு
  10. நாட்கட்டளை
  11. நாழி
  12. அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பொருள்
  13. உபாயம்
  14. உதவி
  15. நிலைமை
  16. விதம்
  17. வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை
  18. உடம்பு
ஒரு இடத்தைக்கடக்க மேலே ஏற உதவும் படி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. learn
  2. study
  3. copy
  4. step
  5. staircase
  6. a measure of volume (about 1/2 gallon)
  • இந்தி
  1. पढ़ना

சொல்வளம்[தொகு]

படி, படிவு, படிதல். படிவம், படிகம், படிமம்
படி, படிப்பு, படித்தல்
படிநிலை
படியள, படியெடு
காற்படி, அரைப்படி
முதற்படி, மாடிப்படி, வாயிற்படி
கீழ்ப்படி
குளறுபடி, அத்துபடி, உருப்படி
பயணப்படி, பஞ்சப்படி


( மொழிகள் )

சான்றுகள் ---படி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி,

"https://ta.wiktionary.org/w/index.php?title=படி&oldid=1934106" இருந்து மீள்விக்கப்பட்டது