உள்ளடக்கத்துக்குச் செல்

பண்ணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
  • உரிச்சொல்
பொருள்
  1. விளையாட்டு
  2. மகளிர் நீச்சல் விளையாட்டு
  3. பெண்கள் கூட்டம்
இலக்கணம்
"கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு" - தொல்காப்பியம் 2-8-22
இலக்கிய வழக்கு
  1. "பண்ணை தோன்றிய எண்ணான்கு பொருளும்" (தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 1)
  2. "விசும்பு இழி தோகை சீர் போன்றுசினே, பசெம்பொன் அவிரிழை பைய நிழற்ற, கரைசேர் மருதம் ஏறிப், பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே" - ஐங்குறுநூறு - 74
ஆங்கிலம்
  1. game
  2. diving in swimming
  • பெயர்ச்சொல்
  1. விளையாடுவோர் ஓசை "தண்ணறுங் கடம்பின் கமழ் தாது ஊதும் வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே" (பரிபாடல் 14-3)
  2. வயல்-பண்ணை
  3. புத்தகப் பண்ணை
பண்ணை


மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. farm
பயன்பாடு
  1. உங்கள் பண்ணை வீடு, இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது?

(இலக்கியப் பயன்பாடு)

  • பண்ணையும் ஆயமும் திரளும் பாங்கரும் (கம்பரா. திரு அவதாரப் படலம்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பண்ணை&oldid=1969090" இலிருந்து மீள்விக்கப்பட்டது