பண்புத்தொகை
Appearance
பண்புத்தொகை (பெ)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்லில் ஒரு வகை; ஏதேனும் ஒரு பண்பு தொக்கி நிற்கும் ஒரு பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- நிறம், அளவு, குளிர், வெப்பம் போன்று ஏதேனும் ஒரு பண்பு தொக்கி நிற்கும் ஒரு பெயர்ச்சொல். எடுத்துக்காட்டாக செந்தாமரை என்பது செம்மை நிறம் உள்ள தாமரை என்று பொருள். இதில் செம்மை என்னும் பண்பு தொக்கி செந்தாமரை என்று உருவானதால் இவ்வகைப் பெயர்ச்சொல்லுக்குப் பண்புத்தொகை என்று பெயர்.
- செந்தாமரை - இதனைச் செம்மை ஆகிய தாமரை என விரித்தல் வேண்டும். செம்மை என்பது பண்பு (நிறம்) ஆகிய எனும் உருபு மறைந்திருப்பதால் பண்புத் தொகையாம். (மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 06 பிப் 2011)
- பண்புத் தொகையில் "மை' எனும் விகுதியும் "ஆகிய' எனும் உருபும் மறைந்திருக்கும். உம் எனும் இடைச்சொல் மறைந்திருப்பது உம்மைத் தொகை. (மொழிப் பயிற்சி-26: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 13 பிப் 2011)
- நன்னூலில் விளக்கம்:
- செம்மை சிறுமை சேய்மை தீமை
- வெம்மை புதுமை மென்மை மேன்மை
- திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர்
- இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே - நன்னூல் நூற்பா 135
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- பண்பு - பண்புத்தொகை - தொகை
ஆதாரங்கள் ---பண்புத்தொகை---DDSA பதிப்பு + வின்சுலோ +