உள்ளடக்கத்துக்குச் செல்

பத்தாம்பசலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பத்தாம்பசலி, பெயர்ச்சொல்.
  1. காலத்திற்கு ஏற்ற புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத, பழைய சம்பிரதாயங்களைக் கைவிடாத பழம்போக்கு; பழமைவாதம்
  2. பழைய சம்பிரதாயங்களைப் பின்பற்றுபவர்; பழமைவாதி; பிற்போக்குவாதி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. old-fashioned, orthodox; steadfast on old customs and values
  2. someone old-fashioned, orthodox
விளக்கம்
  • பத்து வருடங்களை ஒரு முறை குறிப்பதற்கு பசலி கணக்கு என்று பெயர். ஆங்கிலத்தில் பத்து வருடங்களை ஒரு decade என்கிறார்களல்லவா, அதுபோல. இந்த பசலி கணக்கு முறையைக் கண்டுபிடித்தவர் அக்பர். இந்தக் கணக்கு முறை ஏற்படுத்தப்பட்ட கி.பி. அறுநூறாவது ஆண்டை பத்தாம் பசலி என்று குறிப்பிடுவார்கள். இதையே, பழைய சம்பிரதாயங்களை விடாத, புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் சரியான பத்தாம் பசலி' என்று குறிப்பிடுகிறார்கள். ([1])
  • பசலிக் கணக்கு 1591-இல் தொடங்கியது. அதனால், பத்தாம்பசலி 1600.
பயன்பாடு
  • அவர் மாறிவரும் சூழலைப் புரிந்துகொள்ளாத ஒரு பத்தாம்பசலி.
  • காலம் போகிற வேகத்தில் இன்னும் இதுபோன்ற பத்தாம்பசலி விடயங்களில் மூழ்கி கிடப்பது அவர்களது அறிவின்மையையே காட்டுகிறது. ([2])
  • 1968இல் இருந்து பெண்ணுரிமை சார்ந்த கதை கட்டுரைகளை எழுதி வரும் என் மீது யாரும் பத்தாம்பசலி என்று முத்திரை குத்த முடியாது. ([3])
  • பால்ய விவாகம். வாழ்க்கைப்பட்ட குடும்பம் மிகவும் பத்தாம்பசலி எண்ணங்களுள்ள குடும்பம். சகோதரியால் ஒத்துப் போக முடியவில்லை. ([4])
  • நேருவுக்குக் காந்தி இந்துமதச்சார்பு கொண்டவராகவும் பழைமையானவராகவும் இருபதாம் நூற்றாண்டுக்குப் பொருந்தாத பத்தாம்பசலி திட்டங்களை வைத்திருப்பவராகவும் தோன்றினார். நேரு தொழில்நுட்பத்தை வழிபட்டார். நிபுணர்களின் மூளைத்திறனே சமூகத்தின் ஆற்றல் என நம்பினார். வலிமையான அரசு இல்லாமல் நிர்வாகம் இல்லை எனக் கருதினார். ஆகவே கிராமநிர்மாணம் போன்ற காந்தியக் கொள்கைகளை அவர் அபத்தமானதாக எண்ணினார். தருணம் கிடைக்கும்போதெல்லாம் நெருக்கமானவர்களிடம் காந்தியைப்பற்றிச் சலித்துக்கொண்டார். அந்தரங்க உரையாடல்களில் ‘பிற்போக்குக் கிழவர்’ என்று சொல்லி நக்கல் செய்தார். (எம்.ஒ.மத்தாயின் நினைவுகள் 2, ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பத்தாம்பசலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பசலி - பழமைவாதம் - பழமைவாதி - பிற்போக்கு - பிற்போக்குவாதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பத்தாம்பசலி&oldid=1980094" இலிருந்து மீள்விக்கப்பட்டது