உள்ளடக்கத்துக்குச் செல்

பனம்பழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பனம்பழம்
பனம்பழம்-உட்தோற்றம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பனம்பழம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • பனம்பழம் = பனை + பழம்.' பசிக்குப் பனம்பழம்' என்பர். பசியை நன்றாக அடக்கவல்லது. ஆனால் இதையே உணவாகப் பயன்படுத்தினால் கரப்பான், அழுகிய சிரங்கு, மலபந்தம், பித்த வாயுவால் உண்டாகும் நோய்கள் வரும்... இது எளிதில் செரிமானம் ஆகாது... பல நோய்களை உண்டாக்கும்.
பயன்பாடு
  • காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை (பழமொழி)
  • கிராமத்துச் சிறுவர்கள் பனம்பழம் மரத்திலிருந்து கீழே விழும் காலத்தில் பனைமரத்தடியில் போய்ப் பழங்களைப் பொறுக்கி எடுத்து வந்து சாப்பிடுவார்கள். நாரும் சதையுமான பனம்பழத்து வாடை எப்படிக் கழுவினாலும் கையிலிருந்து போகாது. அதிகமாகப் பனம்பழம் சாப்பிட்டால் தலை வலிக்கும் என்ற நம்பிக்கை சிறுவர்களிடமிருந்தது. எனவே செத்தைகளைப் போட்டுத் தீயை மூட்டிப் பனம்பழத்தைச் சுட்டுச் சாப்பிட அது ஒருவகையான சுவையாக இருக்கும். (குழந்தைகள் விரும்பும் தின்பண்டங்கள், ந. முருகேசபாண்டியன் )
  • இதன் கொட்டையை நீக்கி துண்டுகளக அரிந்து வேகவைத்தும், சுட்டெரித்தப் பழங்களை பிசைந்து நார்களைக் களைந்து மஞ்சள் நிறத்து சத்தை சேகரித்து அல்வா போன்றும் சாப்பிடுவார்கள்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பனம்பழம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பனங்கொட்டை - பனைமரம் - பனங்கிழங்கு - நுங்கு - பனையோலை - முக்காழி - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=பனம்பழம்&oldid=1980096" இலிருந்து மீள்விக்கப்பட்டது