பூந்திலாடு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பூந்திலாடு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- லாடு என்றால் அனைவரும் அறிந்த லட்டு எனப்படும் உருண்டையான இனிப்புத் தின்பண்டமாகும்...பூந்தி எனில் கடலைமாவை தண்ணீரில் கெட்டியாகக் கலந்து பூந்திக்கரண்டி எனப்படும் துளைகளுடைய ஒருவகை சமையற் கரண்டியின் மேல்வைத்துத் தேய்த்து மணிமணியாக, காயும் எண்ணெயில் விழச்செய்துப் பொரித்து எடுக்கும் உணவு...இவ்வாறுத் தயாரான பூந்தியை, ஏலக்காய்ப்பொடி, குங்குமப்பூ, சாதிக்காய்ப்பொடி, துண்டுகளாக்கி வறுத்தெடுத்த முந்திரி, வாதுமைப் பருப்புகள் போன்ற பொருட்களோடுக் கலந்து, பதமாகக் காய்ச்சிய சர்க்கரைப் பாகிலிட்டு, விருப்பப்பட்டால் சிறிது பச்சைக் கற்பூரமும் சேர்த்துக் கைகளால் உருண்டைகளாகப் பிடித்து உண்டாக்கியத் தின்பண்டமே மிகச் சுவையுடைய பூந்திலாடு எனப்படுகிறது...பூந்திலட்டு எனப்படுவதும் இதுவேயாகும்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +