பேச்சு:இராத்திரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

புறமொழிச்சொல் அல்ல[தொகு]

இரு எனும் சொல் உரிச்சொல்லாக வரும்பொழுது இருண்ட, கரிய முதலிய பொருள்களைக் குறிக்கும். இச்சொல்லிலிருந்து தோன்றியவையே இருள்(இரு+உள்), இருட்டு(இருள்+டு), இருண்டு(இருள்+டு) மற்றும் இரவு(இரு+அவு) ஆகிய சொற்களாகும். நிலவு>நிலா, உலவு>உலா என்பதைப் போல இரவு>இரா எனவும் விளிக்கப்படும். உதாரணம், இரா, இராப்பொழுது, இராப்பகல், இராப்பாடி. இந்த இரா எனும் சொல், இரா+திரம்=இராத்திரம், இரா+திரி=இராத்திரி எனவும் வரும்.(சாத்திரம்>சாத்திரி,சாத்திரன், மந்திரம்>மந்திரி,மந்திரன், புத்திரம்>புத்திரி,புத்திரன், சுந்திரம்>சுந்திரி,சுந்திரன் என்பதைப் போல) இராத்திரம் எனும் சொல்லிற்கு, இருண்ட திரம் கொண்டது என்று பொருள். இதனடியே தோன்றியதே இராத்திரி எனும் சொல்லாகும்.--ச.பிரபாகரன் (பேச்சு) 01:50, 16 மார்ச் 2014 (UTC)

விளக்கத்திற்கு நன்றி. இலக்கணத்தைக் கொண்டு உட்பிரிவை ஏற்படுத்துதல், ஆங்கில விக்சனரியின் நடைமுறை. நாம் அதனை இங்கு தவிர்த்துள்ளோம். இலத்தீனியெழுத்துக்கள் பல மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது. அவற்றையெல்லாம் சீராக வைத்திருக்க, தளத்தை மேம்படுத்த, அவர்கள் இலக்கணத்தை உட்பிரிவாகக் கொண்டு, தலைப்பிடுகின்றனர். நம் தமிழ் மொழிக்கு, அவர்களின் வடிவம் பொருந்தவில்லை. இங்கு கட்டுரைப்பகுதியான விக்கிப்பீடியாவின் வடிவமே பின்பற்றுகிறோம். இந்த இரண்டு பகுதிகளிலும் உங்கள் கருத்துகளை இடக் கோருகிறேன். ஆதரவு என்பதிலும் கையெழுத்திட மறக்காதிங்க! வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 02:30, 16 மார்ச் 2014 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:இராத்திரி&oldid=1226641" இருந்து மீள்விக்கப்பட்டது