உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:ச.பிரபாகரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரைகள்

[தொகு]

வருக!

  • பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.
வணக்கம்.--01:03, 4 மார்ச் 2013 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

மேற்கண்ட பகுப்பை வளர்த்தெடுத்தமைக்கு நன்றி. எனினும், எச்சொல்லில் இருந்து, அந்த வடசொல் விழைந்தது எனக் கூறினால் இன்னும் நன்றாக இருக்கும். மற்றொன்று நீங்கள் மாற்ற விரும்பும் சொற்களை பட்டியல் இட்டால் ஒரு மணிநேரத்தில் 500 சொற்களுக்கு தமிழ்தானியங்கி மாற்றும். உங்களின் நேரத்தை காக்க, இந்நுட்பத்தை பயன்படுத்தக் கோருகிறேன். வணக்கம்.-- உழவன் +உரை.. 01:08, 4 மார்ச் 2013 (UTC)

என்னிடம் இருப்பது 1952ல் வெளிவந்த திருவாட்டி தி.நீலாம்பிகையம்மையார் எழுதிய 'வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்' எனும் ஒரு நூல்...என்னிடம் மின்னூல் வடிவில் உள்ளது...அதில் 700 வடசொற்கள் உள்ளன...அந்த புத்தகத்தில் உள்ள அப்போதைய வடசொற்கள் நிறைய இப்போது மாறுபட்டுள்ளன...அதனால், நானே தட்டச்சு செய்து புதுப்பிக் வேண்டியுள்ளது...முதலில் சொற்களை பகுப்பில் சேர்த்துவிட்டு பின்னால் அந்த சொற்களுக்கு தனித்தமிழ்ச் சொற்களைப் புதுப்பிக்கலாம் என்று உள்ளேன்...அதனால் 'தனித்தமிழ்ச் சொற்கள்' என்று ஒரு பகுப்பை உருவாக்கியுள்ளேன்...நன்றிகள்...

--ச.பிரபாகரன் (பேச்சு) 07:43, 4 மார்ச் 2013 (UTC)

அம்மின்னூலை நானும் ஒருமுறை காணவிரும்புகிறேன். அல்லது இணையத்தில் உள்ளனவா? அதனையும் இயலுமாயின் அந்த 700 சொற்கள் உள்ள ஆதாரப்பகுதியில் இணைக்க முடியுமென்று நம்புகிறன். நீங்கள் கூறியபடியே அந்த வடச்சொற்களை முதலில் தட்டச்சு செய்வோம். பின்பு பகுப்பிடுவோம். பின்னர் மேம்படுத்துவோம். பகுப்பிடும்போது, அதனை நாம் செய்யாமல் தானியங்கி செய்தால், நமக்கு சில மணிநேரம் மீதமாகும் என்றே நான் எண்ணுகிறேன். நீங்கள் உங்களைப் பற்றி உங்கள் பக்கத்தில் ஒரு சில அறிமுக வரிகளை எழுதக் கோருகிறேன்.மற்றவை பிறகு..வணக்கம்.-- உழவன் +உரை.. 18:35, 4 மார்ச் 2013 (UTC)

http://www.viruba.com/Dictionaries/Vatasol_Tamil_Akaravarisaich_Surukkam.aspx இணைப்பில் வட சொல் அகர வரிசைச் சுருக்கம் மின்-அகராதியாக முழுமையாகவும் ஒருங்குருறியில் உள்ளது.--Viruba (பேச்சு) 14:04, 18 மார்ச் 2016 (UTC)

  1. இரசவாதம் மேம்படுத்தியுள்ளேன். மாற்று கருத்து இருப்பின், அச்சொல்லின் உரையாடற்பக்கத்தில் குறிப்பிடவும்.
  2. மேற்கூறிய மின்னூல் பற்றி அறிய ஆவல்.-- உழவன் +உரை.. 04:55, 5 மார்ச் 2013 (UTC)

அந்த மின்னூல் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் எனும் பக்கத்தில் உள்ளது. அந்த இணையத்தளத்தில் கணக்கு இல்லை என்றால் ஒரு புதிய இலவச கணக்கை உருவாக்கி PDF வடிவில் பதிவிறக்கிக் கொள்ளலாம் --ச.பிரபாகரன் (பேச்சு) 05:55, 5 மார்ச் 2013 (UTC)

நன்றி.ஆனால், நான் பதிவிறக்கம் செய்யவில்லை. டாலரில் பணம் கட்டச்சொல்கிறார்கள். நீங்கள் தலைப்புச்சொற்களை மட்டும் அனுப்பினால், அந்த சொற்களுக்கு குறுகிய காலத்தில் வடசொல் என்றபகுப்பினை இணைத்துவிடுவேன். நீங்கள் அவற்றின் பொருளை விரிவாக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்பதால் இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்.வணக்கம்.-- உழவன் +உரை.. 18:10, 6 மார்ச் 2013 (UTC)

கருத்திடுக

[தொகு]
பேச்சு:ஆரம்பம் என்பதில், உங்கள் எண்ணங்களை இடுக! --தகவலுழவன் (பேச்சு) 07:06, 12 பெப்ரவரி 2014 (UTC)

ஆழி-1

[தொகு]

மிக எளிதான அட்டவணை ஒன்றை உருவாக்கும் முயற்சி ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஆழி-1 நிரலில் ஒரு மாற்றம் செய்ய வேண்டும் என்பதை அறிந்தேன். யாதெனில், </br> என்ற நிரலை ஏறத்தாழ 4 வருடங்களுக்கு முன் அதிகமாக பயன்படுத்திக் கொண்டு இருந்தனர். பின்னர், மீடியாவிக்கியில் ஒரு வெற்றுவரியை ஏற்படுத்தினாலே, அதற்குரிய மாற்றம் ஏற்பட்டு விடும். அதாவது ஒவ்வொரு முறையும் </br> என இடத்தேவையில்லை. அந்தவெற்றுவரியையும், ஆழி-1 நீக்கி விடுகிறது. வெற்றுவரி ஏதேனும் ஒரு தொகுப்பில் இருந்தால், எந்த மாற்றமும் செய்யாமல் விட்டுவிட, விதிவிலக்கை ஏற்படுத்த வேண்டுகிறேன்.

எடுத்துக்காட்டாக, மேலே ஒரு வெற்று வரி விட்டுள்ளேன். இதனை ஆழி-1 நீக்காவண்ணம் செய்யுங்கள். --தகவலுழவன் (பேச்சு) 04:16, 20 மார்ச் 2014 (UTC)

வழுவை சரி செய்துவிட்டேன். நன்றி. --ச.பிரபாகரன் (பேச்சு) 13:37, 20 மார்ச் 2014 (UTC)
அற்புதம். ஆழி-3 க்குரிய குறிப்புகளோடு, ஓரிரு நாட்களில் உங்களைச் சந்திக்கிறேன். உங்களைப் பற்றிய குறிப்புகளை, உங்கள் பயனர் பக்கத்தில், ஒரு சிலவற்றையாவது எழுதுங்களேன். அறிய ஆவல். வணக்கம். --தகவலுழவன் (பேச்சு) 17:06, 20 மார்ச் 2014 (UTC)
நன்றி. --ச.பிரபாகரன் (பேச்சு) 20:44, 20 மார்ச் 2014 (UTC)
உங்கள் பயனர் பக்கத்தினை, முதலில் ஆவலுடன் கண்டேன். நீங்கள் எதுவுமே எழுதாத எனக்கு ஏமாற்றமாக இருந்தது. தற்போது நீங்கள் அமைத்தளித்துள்ள ஆழி-1, அனைத்து விக்கித்திட்டங்களுக்கும் பயன்படக் கூடியது. எனவே, இந்த ஆழிக்குறியதை மட்டும்,பயனர்:ச.பிரபாகரன்/wikt.js என்பதில் இருந்து எடுத்து, பயனர்:ச.பிரபாகரன்/whitespaceTamil99.js என்ற பக்கத்தில் அமைத்தால் பல விக்கிகளிலும் பயன்படுத்தச் சொல்லி, அவர்களின் பின்னூட்டத்தையும் பெறலாமென்று எண்ணுகிறேன். மற்ற நிரலாக்கம் விக்சனரிக்கு மட்டுமே பயன்படும் என்பதால் அப்படியே விட்டுவிடலாமென்றே எண்ணுகிறேன். உங்களின் கருத்தறிய ஆவல். --தகவலுழவன் (பேச்சு) 09:25, 21 மார்ச் 2014 (UTC)
நான் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். நீங்கள் கூறியபடியே ஆழி 1 மட்டும் புதிய பக்கத்தில் சேர்த்துவிட்டேன். --ச.பிரபாகரன் (பேச்சு) 03:21, 23 மார்ச் 2014 (UTC)

────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────உங்கள் பயனர் பக்கத்தில் விக்கிமீடியா என மாற்றினால் நன்றாக இருக்கும். விக்கிப்பீடியா என்ற சொல் கட்டுரைக்கான பகுதி, சொல்லுக்கு விக்சனரி, ஊடகங்களுக்குப் பொதுவகம், நூல் எழுத விக்கிநூல்கள், .. மின்னஞ்சலுக்கு நன்றி. தொடர்வோம். கணியத்தமிழ் தழைத்தோங்க, இனி என்றும் இணைந்திருப்போம்.--தகவலுழவன் (பேச்சு) 11:19, 23 மார்ச் 2014 (UTC)

மாற்றிவிட்டேன்... :) --ச.பிரபாகரன் (பேச்சு) 16:49, 23 மார்ச் 2014 (UTC)

ஆழி-2 சொற்சுருக்க மேம்பாடு

[தொகு]

ஜிமெயிலுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். இப்பகுப்பின் சொற்களை அதனுள் அமைக்கவே முயற்சிக்கிறேன். இதனால் தானியங்கி வேலையும் வேகமெடுக்கும். ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு) 12:51, 28 திசம்பர் 2014 (UTC)Reply