உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Thamizhpparithi Maari

தமிழ் எழுத்து ஊ பற்றிக் கூறும் இப்பக்கத்தில் தேவநாகரி எழுத்து அசைபடமும், பிறமொழி "மொழிபெயர்ப்பு"(-களும் (??!!) தருவது சரியல்ல என்று கருதுகிறேன். தேவநாகரி எழுத்தை விளக்கும் பக்கத்தில் கட்டாயம் இந்த அசைபடத்தைத் தரலாம். திருத்த வேண்டுகிறேன். பொருத்தமாக தர வேண்டுகிறேன். --செல்வா 13:37, 9 ஜூன் 2010 (UTC)

  • தமிழ் ஒலிகளுக்கும், பிற மொழி ஒலிகளுக்கும் உள்ள ஒற்றுமையை, எப்படி உணரவைப்பது?ஒப்பியல் கல்வியே, ஒப்பிலா கல்வியென கருதுகிறேன். (த*உழவன் 02:23, 10 ஜூன் 2010 (UTC))
பிறமொழிகளில் இதன் விளக்கத்தை மொழிபெயர்க்கலாம் (உயிரெழுத்து, ஆறாவது உயிரெழுத்து என). ஒலிப்பு நெருக்கத்தைக் காட்ட அகரமுதலி முதலியவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உதடு, நாக்கு முதலியன வெவ்வேறு மொழிகளில் சற்று வேறுபடும். சற்றேறக்குறைய இந்த சொல்லில் இந்த ஒலியைப் போன்றது என்று குறிப்பிட முடியும். ஆனால் அதற்கு அந்தந்தமொழி தெரிந்தவர்கள்தான் பயன் கொள்ளுவார்கள். தமிழில் புரிந்துகொள்ள தமிழ் எழுத்தைத் தந்தாலே போதும். ஒலிக்கோப்பை இணைக்கலாம் (பிறமொழியாளருக்கும், தமிழருக்கும்). தேவநாகரி எழுத்து அசைபடம் இங்கு தேவை இல்லை (அதற்கான பக்கம் தனியாக இருப்பது நல்லது). தமிழ் ஒலிகளுக்கும், பிற மொழி ஒலிகளுக்கும் உள்ள ஒற்றுமையை, எப்படி உணரவைப்பது? என்று கேட்கின்றீர்கள். யாருக்கு? பிறமொழியாளர் அவர்கள் மொழியில் அதற்கான விளக்கம் தருவர். நாம் தமிழ் அறிந்தவர்கள், தமிழில் தமிழ் விளக்கமாக எல்லா மொழிகளுக்குமான சொற்களின் சொற்பொருளும், பயன்பாடும் ஒலிப்புகளையும் முதலியனவற்றை அறிந்து கொள்ளுதல் அல்லவா குறிக்கோள்?--செல்வா 02:59, 10 ஜூன் 2010 (UTC)
தேவநாகரி எழுத்து அசைபடம் இங்கு தேவை இல்லை (அதற்கான பக்கம் தனியாக இருப்பது நல்லது). யாரும் மறுக்கவில்லை எனில் இதனை நீக்கலாமா?--செல்வா 16:04, 2 செப்டெம்பர் 2010 (UTC)Reply
செல்வா அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். இந்தப்படத்தை தேவநாகிரி எழுத்து பக்கத்திற்கு எடுத்து செல்லலாம். இந்தப்படம் புதிதாக தமிழ் எழுத்துக்களை கற்பவர்களைக் குழப்பும். தமிழ் தேவநாகிரி ஒற்றுமை பற்றிய கட்டுரைகளில் ஒன்றாய் இருக்கலாம். இங்கு வேண்டாமே!-- மாகிர் 16:40, 2 செப்டெம்பர் 2010 (UTC)Reply
இப்படத்தினை நீக்கலாம்--Thamizhpparithi Maari (பேச்சு) 07:51, 28 சனவரி 2020 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஊ&oldid=1889442" இலிருந்து மீள்விக்கப்பட்டது