பேச்சு:குண்டான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

குண்டான் என்பது ஒரு பாத்திரவகை என்பது சரியே! ஆனால் அதைக் காட்ட இணைக்கப்பட்டுள்ள படத்தைப்பற்றி ஐயமுள்ளது...பெரும்பாலும் சோறு ஆக்கவே இந்தப்பாத்திரம் பயனாகியது...ஆகவே வயிற்றுப்பகுதி குண்டாகப் பருத்தும், கழுத்துப்பகுதி சிறுத்து, துளைகளுடைய தட்டை(சிப்பல் தட்டு) அதன்மேல் வைத்து கஞ்சியை குண்டானிலிருந்து வெளியேற்ற ஏதுவாகவும் இருக்கும்...எங்கள் வீட்டிலேயே பார்த்து, நானே சோறும் ஆக்கியிருக்கிறேன்...தற்போது குண்டான் வீட்டிலில்லை...படத்திலிருக்கும் பாத்திரத்தை போசி என்று அழைத்தார்கள் என்று நினைக்கிறேன்--Jambolik (பேச்சு) 22:36, 14 பெப்ரவரி 2014 (UTC)

குண்டானில் பலவகை உள்ளது. இவ்வாரத்தில் ஏற்கனவே சொன்னபடி, சோறு வடிக்கும் குண்டானயும், வடிதட்டையும் பொதுவகத்தில் இணைத்து, இங்கும் தெரிய வகைச் செய்கிறேன். சந்திப்போம். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 14:10, 16 பெப்ரவரி 2014 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:குண்டான்&oldid=1223765" இருந்து மீள்விக்கப்பட்டது