பேச்சு:குரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

'குரு என்ற சொல் தமிழ் இல்லை தயவுசெய்து தமிழ் அகரமுதலியில் இருந்து இந்த சொல்லை அகற்றவும்'.

Nuvola apps package editors.png' அகற்ற தேவையில்லை நண்பரே! பயன் படுத்தாமல் விட்டு விட்டாலே போதும். சமஃசுகிருதம் மக்களின் பயன்பாட்டிலில்லை.காக்கைக் கூட்டினில் குயில் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது போல, தமிழில் வந்தேறி வாழ முயலுகிறது. விடுங்கள்.தகவலுழவன் 15:25, 9 டிசம்பர் 2008 (UTC)

  • குரு என்பது தமிழ்ச்சொல்லே. --Sengai Podhuvan 06:59, 21 ஆகத்து 2011 (UTC)
பகுப்பு:புறமொழிச் சொற்கள் எனும் பகுப்பிலிருந்து நீக்கி விட்டேன். இலக்கிய எடுத்துக்காட்டு இட்டமைக்கு, நன்றி.--07:07, 26 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

திரு. தகவலுழவன் அவர்களுக்கு, குரு என்பது அழகியத் தமிழ்ச்சொல்லே. ஆனால் தமிழில் அதன் பொருள் தான் வேறு. குரு (kuru) என்பது கொப்புளம், கட்டியைக் குறிக்கும். காட்டாக வேர்க்குரு. உச்சரிப்புப் பிழையால் நிகழும் ஒருத் தவறே. மேலும், இவ்வார்த்தை இன்றளவும் மலையாளத்தில் பயன்பாட்டில் நான் மேலேக் குறிப்பிட்டப் பொருளுடன் பொருந்தும் படி பயின்றுவருகின்றனர். கண்ணில் குரு என்றால் - கண்ணில் கட்டி என்று பொருள். ஆகையால் தமிழில் இச்சொல்லுக்கு இணையாக வரிசைப்படுத்தியுள்ள வார்த்தைகளை மாற்றி தமிழ்ச்சொல் முதன்மையடையும் படியும் பின்பு தனித்து வடமொழி என்றத் தலைப்பில் குரு (Guru) வரும்படியும் பயன்பாட்டில் கொண்டுவந்தால் பிந்தொடர்வோர் மெய்யுணரும்படி அமையும். நன்றிகளுடன். --சிங்கமுகன் 06:05, 22 அக்டோபர் 2011 (UTC)

  • விரிவான விளக்கத்திற்கு நன்றி.திரு என்றெல்லாம் அழைக்க வேண்டாம். நான் தமிழுக்காக சில முயற்சிகளை இங்கு எடுக்கிறேன். பூமியில் இருந்து, விண்மீனை காணும் சிறுவனின் மனநிலையை ஒத்தது எனது நிலை. அத்தகைய மனநிலையுடன் எனது வாய்ப்பையும், தமிழையும் காண்கிறேன்.மலையாளத்தில், தமிழைப் போன்ற சங்கதத்தின் வளமையை, நுட்பத்தை இரசிக்கலாம்.தமிழின் நயமும், சங்கததத்தின் நயமும் கலந்துள்ள மலையாளத்தை நீங்கள் இரசிப்பது, ஒப்பிடுவது கட்டற்ற இன்பமே. நிறைய இடங்களில் வருத்தப் படுகிறீர்கள். வருத்தம் வேண்டாமெனக் கோருகிறேன். மொழியோட்டம், ஆற்றின்ஓட்டத்தினைப் போன்று பலநிலைகளை மாறும். சிலகாலம் வெள்ளம் வரும். சிலகாலம் வறட்சி வரும். இக்கண்ணோட்டத்தில் கண்டு இரசிக்கவும். இங்கு மேம்படுத்தவும். தமிழுக்கான அரும்பணிகளை திட்டமிட வேண்டுகிறேன்.வணக்கம்.--03:13, 23 அக்டோபர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
  • நல்ல விளக்கத்திற்கு நன்றி. வேறுமொழிப் பொருட்கள் மிகப் புழக்கத்தில் இருப்பதால் அவற்றை நீக்கக்கூடாது என்பதே என் கருத்தும். பழ.கந்தசாமி 05:16, 23 அக்டோபர் 2011 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:குரு&oldid=1018442" இருந்து மீள்விக்கப்பட்டது