பேச்சு:குறத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் விக்சனரி என்பதால், முதலில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஆங்கில விளக்கத்தை அடைப்புக்குள் தரவும். ஆங்கிலமே தெரியாத(மற்ற ஐரோப்பிய) மொழிகள் தெரிந்தவரும் அதிகம் கவனிக்கின்றனர் என்பதை நாம் மறக்கக் கூடாது. இணையத்தின் வழி தமிழை வளர்ப்பதே நம் நோக்கம். தமிழை விட்டு மிக அந்நியப்பட்டதினால்தான், ஆப்பிரிக்கத் தமிழருக்குத் தமிழறிவு குறைந்து போனது. அதுபோல, பிற நாட்டில் வாழும் தமிழரும் ஆகிவிடக் கூடாது. தமிழ் கற்பவருக்கு, உடனே புரியவைத்தலே நமது நோக்கம்.

இப்பக்கத்திலுள்ள பொருளும், படங்களும் அருமை. இருப்பினும், சிறு மாற்றங்களைச் செய்துள்ளேன். இவற்றிலுள்ள குறவன் X குறத்தி வேறுபாடுகளை உணருங்கள்.

இந்த வடிவமைப்பு வேண்டாம். நாம் முன்பு கலந்துரையாடிய, dove சொல் மாதிரி இருந்தால் சிறப்பாக இருக்கும். அதிலுள்ள வார்ப்புருக்களை ஒருசில நாட்களுக்குப் பிறகு, உருவாக்குவோம். இன்னும் நிறைய வார்ப்புருக்கள் உருவாக்க வேண்டியுள்ளன, உருவாக்குவோம்.

ஏனெனில், அதிகமாக (வலப்பக்கம்) தொகு என்ற சொல் வருவதால், இந்தக் கறுப்பு, வெள்ளை வடிவமைப்பைத் தவிர்த்தேன். கட்டுரைகள் உள்ள தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இம்முறை ஒத்து வரும்.

ஆங்கிலம் போன்ற பிற முன்னனி விக்சனரிகளில், தானியங்கிகளைக் கொண்டு பெரிய பக்கங்களை (பைட்டுகள்) வடிவமைக்கின்றனர்.

பிறகு மேலும் விரிவாகக் கலப்போம். பொங்கலுக்குள், இத்தாலிய மொழியைக் கடக்க வேண்டும் என்று ஆசை.

த*உழவன் 05:46, 12 ஜனவரி 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:குறத்தி&oldid=385426" இருந்து மீள்விக்கப்பட்டது