பேச்சு:கைரேகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரும்பாலும், கட்டைவிரலில் இருக்கும் கோடுகளைக்(ரேகை) குறிக்கிறது என்பது சரியல்ல..உள்ளங்கைகளில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் அத்தனைக் கோடுகளுமே கைரேகைகளாகும்...ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயரும், அவை சொல்லும் பலன்களும் உண்டு...விரலிலுள்ள கோடுகள் விரல்ரேகைகள் எனப்படும்...இவைகள் எல்லாவற்றையும் பார்த்து, கணித்துதான் ஒருவருக்கு எதிர்காலம் சொல்வர்...கையெழுத்துக்குப் பதிலாக thumb impression மற்ற விடயங்களுக்கு finger print என்னும் ஆங்கில சொற்களைப் பயன்படுத்துவர்...--Jambolik (பேச்சு) 23:47, 15 திசம்பர் 2014 (UTC)

  • கையழுத்துப் போடுவிங்களா! அல்லது கைரேகையா? என்று கேட்கும் வழக்கம், தமிழிகத்தில் பல இடங்களில் பரவலாகப் பயன்படுகிறது. கைரேகையா? என்பதற்கு பதில், கைநாட்டா?என்று வினவுவர். வேறொரு சூழ்நிலையில், நான் கையெழுத்துப் போடுவேன். என் மனைவியின் ரேகையதான் உருட்டணும் என்றும் பல கிராமப்புற வங்கிகளில் உரையாடுவதைப் பலமுறை கேட்டு வருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 00:27, 16 திசம்பர் 2014 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கைரேகை&oldid=1265021" இருந்து மீள்விக்கப்பட்டது