பேச்சு:சுட்டாங்கல்
தலைப்பைச் சேர்
கூரை வேயப் பயன்படும் ஓடுகள் மண்ணைச் சுட்டே உருவாகின்றன. அவற்றில் கையோடு, ஓடு என வகைகள் உண்டு. அது போலவே, 'பீங்கான்' வெண்களிமண்ணைக் கொண்டு, சுட்டு உருவாக்கப் படுகின்றன.எனவே, இதனைச் சுட்டாங்கல் என்று சொல்வது, எனக்கு பொருத்தமாகப்பட வில்லை. கல் தட்டையாக இருப்பதில்லையே? வெண்சுட்டோடு, சுட்டோடு எனலாமா?
- automobile என்பதில் இரு சொற்கள் இருந்தது. அதனை ,குறியிடாமல் = குறியீடு இட்டது பிழையே? நீக்கவிட்டேன். நன்றி. நீங்கலே இது போல பிழைகளை நீக்குதல் நலம்.
- த*உழவன் 04:28, 5 ஆகஸ்ட் 2009 (UTC)தொடர்புக்கு..
சுட்டாங்கல் என்பதில் வடிவம் பற்றிய சுட்டு ஏதும் இல்லை. ஆங்கில விக்கியில் கூறப்பட்டுள்ளதைப் பாருங்கள். முதல் வரியில் உள்ளது: A ceramic is an inorganic, non-metallic solid prepared by the action of heat and subsequent cooling பிறகு உள்ளே: A ceramic material is often understood as restricted to inorganic crystalline oxide material. It is solid and inert. Ceramic materials are brittle, hard, strong in compression, weak in shearing and tension. They withstand chemical erosion that occurs in other materials subjected to acidic or caustic environment. Ceramics generally can withstand very high temperatures such as temperatures that range from 1,000°C to 1,600°C (1,800°F to 3,000°F). பானைகளும், ஓடுகளும் களிமண்ணால் செய்து சுடப்படுவதுதான். பீங்கான் (Porcelain) என்பது ஒருவகையான சுட்டாங்கல். காவோலின் (kaolin) அல்லது காவோலினைட்டு (Kaolinite) எனப்படும் அலுமினியம், சிலிக்கான் கலந்த ஒரு களிமண் கனிமத்தில் இருந்து செய்வது பீங்கான். எனவே சுட்டாங்கல் என்பது பொருத்தமான பெயராகத்தான் எனக்குப் படுகின்றது. ஏன் பொருத்தமாக உங்களுக்குப் படவில்லை என்று எனக்கு விளங்கவில்லை. [இது தொடர்பாக தன்முகக் கூற்றாக ஒன்றைச் சொல்ல விழைகிறேன். களிமண்ணில் சிலைகள் செய்து நானே சுட்டும் இருக்கின்றேன். நான் செய்த ஒரு சிலையின் படத்தை விக்கிப்பீடியாவில் என் பயனர் பக்கத்தில் இட்டிருக்கின்றேன், பார்க்கலாம். எனவே களிமண்ணைச் சுடுவது பற்றி நான் சிறிட்தளவூ அறிவேன். இங்கு கனடாவில் சிறு குழந்தைகளும் பள்ளிகளில் களிமண்ணால் பொருள்கள் செய்து, வண்ணம் தீட்டிச் சுடுகிறார்கள். நாங்கள் படிக்கும்பொழுது இப்படையான துய்ப்பறிவுகள் இல்லை]. --செல்வா 02:33, 8 ஆகஸ்ட் 2009 (UTC)
- இந்த பின்னூட்டத்திற்கு முன்னரே, உங்கள் பயனர் பக்கத்தினைப் பார்த்து இரசித்தேன். குறிப்பாக நீங்கள் மலையேறும் காட்சி. உங்களின் சிலை வார்ப்பினைக் கண்ட போது வியந்தேன். உங்களால் எப்படி?.. உங்களின் பன்முகத்திறன், எனக்குள்ளே உந்துதலை ஏற்படுத்துகிறது. அவ்வுந்துதல், எனது அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
- சுட்டாங்கல் என்ற பெயர்ச்சொல் எனக்குப் பொருத்தமாகப் படாததற்கு மேலும் சில காரணங்கள் வருமாறு.
- களிமண்ணால் மண்பானை செய்வதனையும், வெண்களிமண்ணால் 'சுட்டாங்கல்' செய்வதனையும் அருகில் இருந்து பார்த்து இருக்கிறேன். பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை. வெண்களிமண்ணிலிருக்கும் சிறு இரும்புத் துகள்களைக் காந்தத்தை வைத்து நீக்குகின்றனர். கல் என்பது தடிமனாக உள்ளது. இது அங்ஙனமில்லை. உடைந்த துண்டுகளை 'ஓடு' என்றும், 'சில்லு' என்றும் அழைக்கின்றனர்.
- இத்தகையக் காரணங்களால், என்னுள் தயக்கம். சுட்டாங்கல் என்பதனை விட மிகப்பொருத்தமானச் சொல்லை விரும்புகிறேன். தமிழ் பெயர்சொல்லின் பொருளாழம் பற்றி தாங்கள் அறியாததா? ஏற்கனவே, நீங்கள் உருவாக்கியிருக்கும் பனிப் பையாறு என்பதில், 'பைய', (திருக்குறளில்) எனும் சொல் இன்றளவும் கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். இச்சொல்லை அவர்களிடம் காணப்போக, 'விரச' என்னும் சொல்லை அவர்களிடம் கண்டுணர்ந்தேன். 'பைய' என்பதற்கு எதிர் சொல்லாக விரச = வேகமாக என்றும் பயன்படுத்துகின்றனர். அது போல சாதாரண மக்களின் பயன்பாட்டில் சுட்டாங்கல் என்னால் காண இயலவில்லை.
- த*உழவன் 05:41, 8 ஆகஸ்ட் 2009 (UTC)தொடர்புக்கு..
- என் பயனர் பக்கத்தை முன்னரே பார்த்து இரசித்ததற்கு நன்றி. நானே திண்ம எரி பொருள்கள் இட்டு களிமண்ணால் செய்த சிலைகளைச் சுட்டிருக்கின்றேன், எப்பொழுது கறுப்பாக வரும் எப்பொழுது செம்பழுப்பாக வரும் என்பதை என் குறுந் துய்ப்பறிவில் கண்டிருக்கின்றேன் என்று கூறவே சுட்டினேன். இப்பொழுது சுட்டாங்கல் பற்றிப் பார்ப்போம். நீங்கள் மீண்டும் மீண்டும் "தட்டையாக" இல்லை, "தடிமனாக" உள்ளது என்றவாறே கூறுகின்றீர்கள். சுட்டாங்கல் என்பது என்ன வடிவிலும் இருக்கலாம். வடிவச்சுட்டு இல்லாத சொல். இமய மலையையே கூட வெறும் கல் என்னும் ஒருசொல்லால் குறிக்கலாம். தோசைக்கல் என்று தட்டையாக எளிதாக சூடேறும் "கல்" வழக்கில் உண்டு. இன்று இரும்பு போன்ற பொருள்களில் செய்திருந்தாலும், முன்னர் தட்டையான கல்லாக இருந்திருக்க வேண்டும். பேச்சு வழக்கில் "நீங்கள் வந்தவுடன் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தோசை சுட்டுத்தருகிறேன்" என்னும் பொருள் படும் சொற்றொடரை, "உங்கள் தலையைக் கண்டவுடன் கல்லைப் போடுகிறேன்" என்பார்கள் (இதனை விளையாட்டாக "ஐயோ அப்படிப் போட்டால் என் தலை தாங்காது" என்னும் உரையாடல்களும் கேட்டிருக்கக் கூடும்). மேலும் எல்லாச்சொல்லும் பேச்சுவழக்கில் இருந்து பெறுதல் வேண்டியதில்லை. பேச்சு-இலக்கிய வழக்கு-தொழிலிய வழ்க்குச் சொற்கூறுகளில் இருந்து சொல்லமைக்கலாம். செராமிக் என்னும் சொல் ஆங்கிலத்தில் 1850 இல் தான் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது (ஆக்ஃசுபோர்டு அகரமுதலி, (OED) தரும் சான்றுகோள்: "1850 J. MARRYAT Pottery & Porc. Introd., The Plastic or Keramic") அவர்கள் முதலில் கெராமிக் என்றனர். இச்சொல் கிரேக்கச்சொல்லாகிய κἑραμος (கெராமொச்˘) = குயவர் (களி)மண் என்பதில் இருந்து பெற்றது. முதலில் ஆங்கிலத்திலும் செராமிக் என்னும் சொல் கலைப்பொருட்கள் செய்யும் தொழிற்கலையில் பயன்பட்டது (இன்றும் பயன்படுகின்றது), ஆனால் இன்று மிகுவெப்பம் தாங்கும் பொருள் என்னும் பொருளில் பொறியியலிலும் (பிறபல துறைகளிலும்) பெரும் பயன்பாடு பெறுகின்றது. செராமிக் பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகளாகத் தருவனவற்றுள், பீங்கான், "stoneware", "Earthenware, which is often made from clay, quartz and feldspar." முதலியன குறிப்பிடப்படுவதையும் நோக்கலாம். stoneware என்பது கற்பொருள்தானே? ஓடு என்னும் தமிழ்ச்சொல், ஏதேனும் ஒன்றோ இரண்டோ திசைகளில் சற்று நீட்டமாக இருப்பதைக் குறிப்பாக சுட்டும் சொற்பொருள். எனவே வீட்டு ஓடு, மண்டை ஓடு, மர ஓடு, கல் ஓடு, தேங்காய் ஓடு "கொட்டாங்குச்சி"), என்னும் பயன்பாடுகள் உண்டு. சுட்டாங்கல் என்பதில் உள்ள "கல்" என்பது பொருள் வெறும் உறுதியானது என்பது மட்டும் அல்ல, கல்லுதல் என்றால் தோண்டுதல் என்று பொருள். சிறப்பாக நிலத்தைத் தோண்டுதல் (தோண்டி எடுத்தல்). ஒருசிலர் கல் என்றால் கறுப்பு என்பர் (அப்பொருளும் உண்டு). இன்னும் பல செய்திகளை விரித்து எழுதலாம் (சொற்பொருத்தம் பற்றி), ஆனால் தேவை இல்லை என்று நினைக்கிறேன் (நேரமும் ஆகும்). சுட்டாங்கல் என்பது மிகவும் பொருத்தமான சொல் என்பது என் கருத்து. சுட்டாங்கல் என்பதில் எந்த வடிவச்சுட்டும் இல்லை. தட்டையானவற்றுக்கும், உருளையானவற்றுக்கும், உருண்டையானவற்றுக்கும் சிறு குன்றிமணி போன்றவற்றுக்கும், என்று எவ்வகையான வடிவுடைய பொருளுக்கும் பயன்படுத்தலாம். சுட்டாங்கல் படிவு/படலம் என்று கூடப் பயன்படுத்தலாம். சுட்டாங்கல் என்பது பொருளின் பெயர் (அதன் வடிவின் பெயர் அல்ல). --செல்வா 15:09, 8 ஆகஸ்ட் 2009 (UTC)
- தோசைக்கல் என்று நீங்கள் கூறியது எனக்கு முழு நிறைவை தருகிறது. எங்கள் வீட்டில் மண்ணால் செய்யப்பட்ட தோசைக்கல் ஒன்று உள்ளது. என் பாட்டிக்கு அவர்கள் பாட்டி தந்ததாகச்சொல்வார். சுட்டாங்கல் படிவு என்பது அருமை. நன்றி.த*உழவன் 17:33, 8 ஆகஸ்ட் 2009 (UTC)
நன்றி, த.உழவன். உங்கள் பாட்டியின் பாட்டி (உங்கள் எள்ளுப்பாட்டி) மண்ணால் ஆன தோசைக் கல் கொடுத்தார்கள் என்ற செய்தி வியப்பூட்டுவது. அது பாதுகாக்க வேண்டியது. பகிர்ந்தமைக்கு நன்றி.--செல்வா 23:36, 8 ஆகஸ்ட் 2009 (UTC). [பாட்டியின் தாயார் கொள்ளுப்பாட்டி, கொள்ளுப்பாட்டின் தாயார் எள்ளுப்பாட்டி. எனவே பாட்டியின் பாட்டி எள்ளுப்பாட்டி.]--செல்வா 02:12, 9 ஆகஸ்ட் 2009 (UTC)
Start a discussion about சுட்டாங்கல்
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve சுட்டாங்கல்.