பேச்சு:தாற்பரியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இச்சொல் எனக்கு தெரிந்த வரை "தாத்பர்யம்" என்றே அழைக்கப்படும். இது வடசொல்லாகும். இணையத்தில் நீங்கள் கொடுத்த எழுத்து வடிவம் (spelling) வேறுங்கும் இல்லை.

ஆம் நானும் இது பிழையான எழுத்துப்பெயர்ப்பென்றே எண்ணுகிறேன். தாத்பரியம் என்ற சொல் உள்ளது--சோடாபாட்டில்உரையாடுக 13:31, 13 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும் தவறுதலாக தாற்பரியம் என்ற வார்த்தையை தாற்பறியம் என்று எழுதிவிட்டேன். மேலும் தாத்பரியம் என்ற வார்த்தையை நான் அகராதியில் துலாவியப்போது அது எனக்குக் கிட்டவில்லை. தாற்பரியம் என்ற வார்த்தை கௌரா அகராதியில் பக்கம் 412ல் இடம் பெற்றிருக்கிறது. நான் பிறமொழியை ஒப்பிட்டு கூறுகிறேன் என்று தவறுதலாக என்ன வேண்டாம். மலையாளத்தில் தால்பரியம் என்ற வார்த்தைப் பயன்பாட்டில் உள்ளது. இங்ஙனம் நோக்கின் தமிழில் ஒரு விதி உண்டென நான் படித்திருக்கிறேன். வடமொழியுடன் புணர்ச்சி நிகழாதென. இங்கு தாற்பரியம் வடமொழியாகினால் புணர்ச்சிவிதியை ஏற்றிருக்காது என நினைக்கிறேன். எனக்கு இது வடமொழியாத் தமிழா என்பது தெரியாது. இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் விளக்கினால் சிறப்பாக இருக்கும். பரியத்தில் ஏற்பட்டப் பிழையை மாற்றிவிடுகிறேன். தவற்றைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. --சிங்கமுகன் 19:02, 13 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

  • இந்தச்சொல் தமிழா அல்லது வடமொழியா என்னும் ஐயமே வேண்டாம்...இதற்கு வடமொழி-- तात्पर्य--தா1த்11ர்ய என்னும் சொல்தான் மூலம்...பொருள்,அர்த்தம் நோக்கம், குறிக்கோள், விருப்பம் போன்ற பல பொருட்கள் கொண்டது...இந்தசொல்லைத் தமிழ்ப்படுத்தும்போது தாத்பரியம் என்றோ தாற்பரியம் என்றோ எழுதலாம்...வடமொழி தாத்காலிகம் என்னும் சொல்லிலிருந்து தமிழ் 'தற்காலிகம்' என்னும் சொல் உருவாகவில்லையா?--71.62.61.237 20:08, 17 சனவரி 2013 (UTC)[பதிலளி]

மிகச்சரியானக் கருத்தே--Jambolik (பேச்சு) 21:42, 17 சனவரி 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தாற்பரியம்&oldid=1167835" இலிருந்து மீள்விக்கப்பட்டது