உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:புன்னை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
  • படத்திலுள்ள பூவின் மொட்டுகள், குண்டுமல்லியைத் திருப்பி வைத்தது போல் அழகாக இருப்பது மனதினை கவருகிறது. மலரந்த மலரோ, ஆவாரம்பூவினை நினைவுபடுத்துகிறது.த*உழவன் 06:37, 11 மே 2010 (UTC)Reply

புன்னை மரம் மிக அழகான மரம். இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கும். இங்கு தந்திருக்கும் பூவின் படமும் மிக அருமை. புன்னை மரத்தின் அறிவியல் பெயரே அழகை வலியுறுத்துவது. Calophyllum inophyllum என்னும் சொல்லில் calophyllum என்னும் சொல்லின் பொருள் அழகானது என்பது!! கிரேக்க மொழிச்சொல்லான καλός, காலோசு, என்பது அழகு என்பதைக் குறிக்கும் (calophyllum = அழகான இலை). சங்க இலக்கியத்தில் புன்னைப்பூ சிட்டுக்குருவியின் முட்டை போல இருப்பதாகக் கூறியதை பி.எல்.சாமி குறிப்பிடுகின்றார். (பி.எல். சாமி, செடிகொடி விளக்கம், பக் 11-12). இக்குறிப்பை சொற்பக்கத்தில் சேர்க்கின்றேன். என்னிடமும் சில புன்னைமரப் படங்கள் உள்ளன. சென்னையில் கபாலீசுவரர் கோயிலின் சுற்றாலையில் ஆறுமுகன் சன்னதிக்கு சற்று முன்னே புன்னவனநாதர் சன்னிதி உண்டு, அங்கே புன்னை மரம் நெடுநாட்களாக உள்ளது. நான் 50 ஆண்டுகளுக்கு முன்னே பார்த்து வியந்த மரம். இன்றும் உள்ளது. புன்னை மரம் பரலாக இருந்தது, இன்று வீடு, கட்டடங்கள் எல்லாம் பெருகி விட்டதால் மரங்கள் எண்ணிக்கையில் இன்று சிறுத்துவிட்டாலும் இன்னமும் நகர்ப்புறங்களிலேயே பார்க்கலாம். நான் 50 ஆண்டுகளுக்கு முன்பாக கண்டு களித்த பளபளப்பான இலைகளை நினைத்தால் இன்றும் என் உள்ளம் களிப்பால் விரிந்து மலர்கின்றது. --செல்வா 15:07, 11 மே 2010 (UTC)Reply

  • //50வருடங்களுக்கு முன்பா// ஆகா! உங்களுக்கு என் அண்ணன் வயதிருக்குமென நினைத்தேன். என் அப்பாவயதினை ஒத்தவரா நீங்கள்? மோதிரவிரலால் தான் குட்டுபடுகிறேனா? மகிழ்ச்சி. நானும் அப்படங்களை காண ஆவலாக இருக்கிறேன்.த*உழவன் 04:06, 14 மே 2010 (UTC)Reply
ஆமாம் 1960 உக்கும் முன்னால். என் உள்ளத்தின் அகவை 22-26 இருக்கலாம், ஆனல் உடலுக்கு அகவை என்னைக் கேட்காமலே கூடிவிட்டது :) கிளிமஞ்சாரோ மலை ஏறியபொழுது என் அகவை 59. எனக்கு அகவை 60 இருக்கையில் கலிவோ'ர்னியாவில் உள்ள இயோசமிட்டி (Yosemite) புரவகத்தில் உள்ள புகழ்பெற்ற அரையுண்டை (Half Dome) என்னும் வெட்டுப்பாறையின் மீது ஏறினேன் (மிக நெடுக்கான ஏற்றம்; சென்றுவர 27 கி.மீ - அதுவும் ஒரே நாளில்). 70 அகவை முடியும் முன்னர் ஏறவேண்டிய மலைகள் இன்னும் பல உள்ளன. த*உழவன், நான் உங்களைக் குட்டவில்லை ஐயா, என் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன். அதுவும் விக்சனரியின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு. குட்டுப்படுவதாக கருத வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன். புன்னைக் காய்கள் இருக்கும் ஒரு படம் மட்டுமே புதிய செய்தியைத் தருவதாக உள்ளது. எனவே அதனை ஏற்றுகிறேன்.--செல்வா 17:09, 14 மே 2010 (UTC)Reply
புன்னைக் காய்களுடன் உள்ள படத்தைச் சேர்த்துவிட்டேன்.--செல்வா 21:02, 2 ஜூன் 2010 (UTC)
  • படங்கள் (இங்கும் த.வியிலும்) மகிழ்ச்சியே. படங்களை விக்கி ஊடக நடுவத்தில் பதிவேற்றினால் பல திட்டங்களில் உள்ளோரும் பயன்படுத்தவர் அல்லவா? தமிழரின் பதிவுகள் அங்கே ஏன் குறைவாக இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். மேலும், அங்கு பதிவேற்றினால் இங்கு பதிவேற்றிடத் தேவையில்லையே? த.வி.யின் சகோதரத்திட்டங்களை, த.வியே எண்ணாமலிருந்தால் எப்படி? படங்கள் மட்டும் அல்ல. பல தொழில் நுட்பங்கள். புகுபதிகை செய்தவுடன் வலப்பக்கம் வரும் கடிகாரம்,...
குட்டு படுகிறேன் என்று வருத்தப்படாமலே சொன்னேன். ஏற்கனவே, நான் ஒரு கற்கின்ற கல் என்னை உங்கள் உளி செதுக்கட்டும் என்று கேட்டிருந்தேன். அதனைமறக்காமல் நீங்கள் செய்வதாக நினைக்கிறேன்.
தினமும் பலவற்றினை செய்ய வேண்டுமென எண்ணுகிறேன். ஒரு சிலவற்றினை மட்டுமே செய்ய இயலுகிறது. எனது அடித்தளத்தினை மாற்றிவருகிறேன். அது முடிந்தால், இந்த உழவனின் கலப்பை உழும்.

--(த*உழவன் 01:56, 3 ஜூன் 2010 (UTC))

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:புன்னை&oldid=657087" இலிருந்து மீள்விக்கப்பட்டது