பேச்சு:மானம்
தலைப்பைச் சேர்மா என்றால் அளவு. மாத்தல் என்றால் அளத்தல். இதிலிருந்து ஒப்புமை, ஒரு அளவு முதலிய பொருள்கள் தோன்றின. (உளம் சார்ந்த உணர்வு) நிறை என்றும் பொருள். மாந்தர் நிறை மானம். இது ஏதோ மாந்தரின் எடை (நிறுத்தல் அளவை, இயற்பியல் கருத்து என நினைக்க வேண்டாம் :) ) இந்த நிறை, முழுமை, ஒழுக்க உயர்வு என்பதும் மேற்பண்பு ஈடு (ஒப்புமை) என்பதோடு தொடர்பு கொண்டது. இச்சொல்லின் 20+ பொருள்களும் ஒருங்கிணைந்த உட்பொருள் சுட்டுவது. நிறை, உயர்வு என்பதே கற்பு என்பதும். கற்பு என்றால் உறுதி என்று உட்பொருள். கல்வியால் ஏற்படும் உறுதிக்கும் கற்பு என்று பெயர். உறுதி பயப்பதால் கல்விக்கே கற்பு என்றும் ஒரு பெயர் உண்டு (கல் -> கற்பு என்பது சொல்வடிவ வளர்ச்சி காட்டல்; பொருள்வழி தமிழில் கல் என்றாலே உண்மை சார்ந்த உறுதி பிறக்குமாறு கற்றல் - உண்மைக்கால் பெற்று உறுதி பிறக்கக் கற்றல் கற்பு -- ஏதோ தொல்காப்பிய நூற்பா போல உள்ளதல்லவா :) )--செல்வா 20:10, 19 மே 2010 (UTC)
- மாற்றாணி என்பது தங்கம், வெள்ளி போன்ற ஒரு மாழைப் (உலோகப்) பொருளால் ஆன ஒன்றை, அதுதான் என்று அறிய உரைகல்லில் ஒப்பிட்டு உரைத்துப் பார்க்கும் மாற்று ஆணி. ஈடாக (ஒப்புமை உடையது) உள்ளது என்பதைக் காட்டும் மாற்று ஆணி (மாழை ஊசி). ஈடு என்னும் ஒப்புமை அளவு காட்டும் பொருள்.--செல்வா 20:22, 19 மே 2010 (UTC) இதனை touch-needle என்பர் ஆங்கிலத்தில். உரைகல்லில் உரைத்துப் பார்க்கும் மாற்றாணி.--செல்வா 20:23, 19 மே 2010 (UTC)
- செல்வா! அருமையான விளக்கம். நன்றி :). பழ.கந்தசாமி 22:06, 19 மே 2010 (UTC)
- மாற்றாணி என்பது தங்கம், வெள்ளி போன்ற ஒரு மாழைப் (உலோகப்) பொருளால் ஆன ஒன்றை, அதுதான் என்று அறிய உரைகல்லில் ஒப்பிட்டு உரைத்துப் பார்க்கும் மாற்று ஆணி. ஈடாக (ஒப்புமை உடையது) உள்ளது என்பதைக் காட்டும் மாற்று ஆணி (மாழை ஊசி). ஈடு என்னும் ஒப்புமை அளவு காட்டும் பொருள்.--செல்வா 20:22, 19 மே 2010 (UTC) இதனை touch-needle என்பர் ஆங்கிலத்தில். உரைகல்லில் உரைத்துப் பார்க்கும் மாற்றாணி.--செல்வா 20:23, 19 மே 2010 (UTC)
- இதிலுள்ள இலக்கியப் பயன்பாடுகளை விரிவு படுத்தியுள்ளேன். (நாலடி-->(நாலடியார்)
சில சொற்குறிப்புகள், என்னவென்று புரியவில்லை. (எ. கா.) கந்தபு(கந்தபுராணமா?), திருவிளை(திருவிளையாடற்புராணமா?), இராமநா(புரியவில்லை?) இது போல பல சொற்குறிப்புகளை, சென்னைப் பேரகரமுதலியில் காண்கிறேன். அவற்றின் முழுமையை எப்படி கண்டறிவது? வழிகாட்டிட வேண்டுகிறேன்.த*உழவன் 01:35, 20 மே 2010 (UTC)