பேச்சு:mermaid
தலைப்பைச் சேர்Appearance
mermaid என்றால் கற்பனையான ஒரு பெண்ணின் தலை மற்றும் உடலோடு, கால்களுக்குப் பதிலாக நீண்ட மீன்வாலைக் கொண்ட கடற்வாழ் உயிரினம்...இதற்கு மீன்வளம் என்ற பகுப்பு எவ்வாறு பொருந்தும்? --Jambolik (பேச்சு) 21:50, 15 பெப்ரவரி 2014 (UTC)
- 95%ஆங்கிலச்சொற்கள் தமிழ் இணையக்கல்விக் கழக இணையத்தளத்தில் இருந்து பதிவேற்றப்பட்டது. இதில் ஏறத்தாழ 1.25 இலட்சம் சொற்கள் என்னால், 'தகவல்எந்திரன்' தானியங்கி முறையில் பதிவேற்றப்பட்டது. அதற்கு முன் ஒரு இலட்சம் சொற்களை, சுந்தர் தானியங்கி வழியே பதிவேற்றப்பட்டது. அத்தளத்தில் உள்ளபடியே இங்கும் பதிவேற்றப்பட்டுள்ளது. பகுப்பு இவ்வாறு பொருளற்று இணைந்து இருப்பது போலவே, பல சொற்களுக்கு உரிய விளக்கங்களும் மறுசீரமைப்பு தேவைப்படும் நிலையிலேயே உள்ளன. அவ்வப்போது சீரமைப்பவர் இருப்பினும், ஏற்படும் மாற்றத்தின் அளவு குறைவே. எனவே, தவறு எனில், பேச்சுப்பக்கத்தில் மாற்றத்திற்கான காரணத்தை குறித்து உகந்ததை மாற்றுங்கள். அது பிறருக்கு வழிகாட்டுதலாக இருக்கும். அதிக சொற்களில் மாற்ற வேண்டுமெனில், பட்டியல் தந்தால், உங்களுக்காக தகவல் எந்திரன் செய்யும். அல்லது உங்களுக்கே ஆர்வம் இருப்பின் தானியங்கி வழியே மாற்றும் வழிமுறைகளை அறிமுகப்படுத்துகிறேன். தற்போது தமிழ் சொற்களை அதிகரிக்க முயற்சித்து வருகிறேன். மிகப்பழைய பதிப்பு சென்னைப்பேரகரமுதலி என்பதால், பல களைகளை நீக்க வேண்டியுள்ளது. அதற்கான நிரல் உதவியை ஒரு சில நண்பர்களும், நானும் முயன்று வருகிறோம். பழ.கந்தசாமி அடிக்கடி சொல்லுவார். //ஒரு சொல்லுக்குரிவற்றைறைப் பதிவேற்றும் போது, அரைகுறையாக செய்யக்கூ்டாது. முழுமையாக செய்து விட்டு, அடுத்து சொல்லுக்கு செல்லவேண்டும். // அதனை எண்ணியே செயற்படுகிறேன். தற்போது களைகளை நீக்கும் கலையை கற்பதற்கே, நேரம் சரியாக இருக்கிறது. மற்றவை உங்கள் எண்ணம் கண்டு. --தகவலுழவன் (பேச்சு) 14:03, 16 பெப்ரவரி 2014 (UTC)
Start a discussion about mermaid
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve mermaid.