பேச்சு:pixel

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

1)pixel என்பது தற்போது எல்லாப் புகைப்படக்கருவிகள்ளிலும் இடப்பட்டுள்ளது. எனக்குத்தெரிந்தவரையில் இதன் பொருள் electronic picture என்பது.இதற்குத் தமிழ் இணைச் சொல் இருக்கிறதா? இல்லையென்றால் படத்துளி என்று ஏன் ஒரு சொல்லை உருவாக்கக் கூடாது.சாம் மோகன் லால்

  • சாம் மோகன் லால் என்றவர் மேற்கூறிய கருத்தை [[[pixel]] பக்கத்தில் இட்டிருந்தார். அதை இங்கே இட்டிருக்கிறேன். பழ.கந்தசாமி 02:28, 17 ஆகஸ்ட் 2010 (UTC)

2) படச்செறிவு என்று பயன்படுத்தலாமென்று கருதுகிறேன்.சாம் மோகன் லால்? உங்கள் கையொப்பத்திற்கு பதில், தவறாக பதிவாகி விட்டதா?(--த*உழவன் 02:20, 17 ஆகஸ்ட் 2010 (UTC)

  • பழ. கந்தசாமி கொடுத்துள்ள சொற்கள் மிகவும் பொருத்தமானவை: படத்துணுக்கு, படச்சில், படப்புள்ளி. இதில் படச்சில் என்பது நல்ல சொல். சில் என்றால் சிறியது, மெல்லியது என்னும் பொருள் உண்டு. மென்மையான காற்றை (நாம் தென்றல் என்று போற்றுவதைப் போல்), சில்காற்று என்று கூறுவது மென்மையான காற்று (சிறிய, சிறுமை என்பதே அடிக்கருத்து). தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சி என்னும் பாட்டில்

வையை அன்ன வழக்குடை வாயில்,
வகை பெற எழுந்து வானம் மூழ்கி,
சில்காற்று இசைக்கும் பல் புழை நல் இல்,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்

என்னும் குறிப்பிடத்தக்கன. சில் (அல்லது சில்லு )என்றால் ஆழி, சக்கரம் என்றும் பொருள் உண்டு; இது பெரும்பாலும் இலங்கையில் வழங்குவது. அங்கும் கூட இது வட்டம் (சிறுவட்டம்) என்னும் பொருள் இருந்து வந்திருக்க வேண்டும். ஒருகாலத்தில் உருண்டோடும் ஆழிகள், சக்கரங்கள் சிறியதாக இருந்திருக்கலாம். சில், சில, சில்--> சிற் --சிறிய, சிற்றம் சிறுகாலை (வைகறை) என்பது தெளிவான பொருள் தருவது. எனவே படச்சில் என்பது சுருக்கமாகவும் அழகாகவும் உள்ளது. முதலில் சாம் மோகன் லால் இட்ட படத்துளி என்பதும் மிக எளிய, மிகப் பொருத்தமான சொல். சிள் என்றாலும் சிறியதே. சிள்லெனல் என்றால் சட்டென்று விரைதல் (குறைந்த காலத்தில் நகரதல்). சிள்வண்டு என்றால் cricket என்னும் பூச்சி (இது விட்டுவிட்டு ஒலியெழுப்பும் வண்டு, அதாவது துண்டு துண்டாக ஒலியெழுப்பும் வண்டு. இதிலும் சிறுமை என்னும் பொருள்தான் அடிப்படை). சிள்--> சிட்--> சிட்டு (சிறியது), சிட்டி.. இப்படியாகப் போகும். அதாவது சில் என்பது சிறியதுண்டு என்பதும் படச்சில், படச்சிள் (படச்சிள்ளு), படத்துளி, படத்துணுக்கு என்பதெல்லாம் நல்ல சொற்கள். படவணு என்பதும் நல்ல பொருத்தமான சொல். அண், அணு என்றால் சிறியது. பொருள்கள் எவ்வாறு அணுக்களால் ஆனதோ அதுபோல் படமும் அதன் கூறான படவணுக்களால் ஆனது :). படச்செறிவு என்றால் பட அடர்த்தி என்று பொருள்தரும், ஆகவே பொருந்தாது. --செல்வா 13:04, 17 ஆகஸ்ட் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:pixel&oldid=778543" இலிருந்து மீள்விக்கப்பட்டது