பேச்சு:tide
தலைப்பைச் சேர்ஓதம் என்பதே சிறந்த சொல்லாக்கம். நானறிந்து சங்க இலக்கியங்களான நற்றிணை 2 இடமும் அகம் 3 இடமும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் தேவாரம் போன்ற பிற்கால இலக்கியங்களும் இதை ஓதம் என்றே நல்கின.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:55, 20 ஏப்ரல் 2013 (UTC)
- பெரும்பான்மையான ஆங்கில சொற்களுக்கு வரும் பொருள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தாரால் கொடுக்கப்பட்டது/எடுக்கப்பட்டது. இவை தானியங்கி கொண்டு பதிவேற்றப்பட்டதால், எந்த அளவு சரியான பொருளைத் தரும் என்று ஒவ்வொரு பயனருமே கூற வேண்டும். இதே போல, நீங்கள் உங்கள் கருத்தைப் பேச்சுப் பக்கத்தில் கூறிவிட்டு, யாரும் மாற்றுக் கருத்துக் கூறவில்லையெனில், சொல் பக்கத்தினை திறந்து, சரியான பொருளையும் அங்கு எதனையும் நீக்காமல், தொடர்ந்து சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதுவே இதுவரை இங்குள்ள நடைமுறையாக பின்பற்றப்படுகிறது. முற்றிலுமாக நீக்கிவிட்டு, புதிய பொருளைச் சேர்க்க, பிறரின் கருத்தாடலும், வாக்கெடுப்பும் அவசியமென்று எண்ணுகிறேன். மிக க்குறைவான பங்களிப்பாளர்கள் உள்ள நிலையில் வேறு வழி தெரியவில்லை. --த♥ உழவன் +உரை.. 06:53, 21 ஏப்ரல் 2013 (UTC)
வாக்கெடுப்பு நடத்துவதே சிறந்தது. ஓதம் அறிதல் கட்டுரையை விக்கிப்பீடியாவில் பார்க்கவும். அதிலுள்ள வெளியிணைப்புகளையும் பாருங்கள். சங்க இலக்கியத்தில் ஓதம் என்ற பெயரே 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடல் ஏற்ற இறக்கத்தை சுட்ட பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இன்னும் சிறிது நாட்களில் அனைத்தையும் சேர்த்து விடுகிறேன். ஒருவேளை வாக்கெடுப்பு தேவையற்றது என நீங்கள் நினைத்தால் அவற்றை இணையான சொற்கள் என்ற தனியொரு உள்ளடக்கத்தில் இதே பக்கத்தில் காட்டலாமே? நீக்கினால் தானே சிக்கல்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:21, 4 மே 2013 (UTC)
- எனது அனுபவத்தில் தான் மேற்கண்டவைகளைக் கூறினேன். நீங்கள் கூறியபடி, //நீக்கினால் தானே சிக்கல்.// இலக்கியமேற்கோள்கள் இருக்கும் பொருட்களை முதலிலும், பிறவற்றை பின்புறமும் ஒதுக்கலாமென்றே எண்ணுகிறேன். நாற்றம் என்ற சொல் மிகக்குறுகிய பொருளுடன், துர்நாற்றம் என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. அதுபோல, பல தமிழ்ச் சொற்களை நாம் மீளமைக்க, உங்களது உழைப்பு மிக உறுதுணையாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். மிக்க நன்றி. வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 10:31, 7 மே 2013 (UTC)