வறண்டி போன்ற அலகுடைய, நீரின் மேல்மட்டத்தில் உணவுட்கொள்ளும் வாத்து.
ஆண் சிறவி அடர்பச்சை நிறத்தலை, வெண்ணிற உடல், செம்பழுப்பு விலாப்பகுதி உடையது; பெண் சிறவி திட்டுகளுடன் கூடிய பழுப்பு நிற உடலுடையது. இது ஐரோப்பாவிலிருந்து குளிர்காலத்தில் தென் ஆசிய, ஆசியப் பகுதிகளை அடைகிறது.