உள்ளடக்கத்துக்குச் செல்

மண்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மண்டுதல், பெயர்ச்சொல்.
  1. நெருங்குதல்
    (எ. கா.) விரிசடை மண்டி யலைந்திட (கோயிற்பு பதஞ்சலி. 40)
  2. விரைந்து செல்லுதல். கடற்படை குளிப்ப மண்டி (புறநா. 6)
  3. திரளுதல். கால்விசைத்தோடிக் கடல் புக மண்டி (திருவாச. 2,135)
  4. உக்கிரமாதல். மண்டமர் (பு. வெ. 7, 28)
  5. மிகச் சுவாலித்தல். மண்டு மெரியுள் (பு. வெ. 1,1)
  6. அதிகமாதல். மண்டிய கடும்பசி தனக்கு (தாயு. ஆனந்தமான. 4)
  7. ஈடுபடுதல். முற்பட வடிவிலே மண்டுகிறாள் (ஈடு., 5, 3, 1)(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  8. செலுத்துதல். நுதிமுக மழுங்க மண்டி...மதில்பாயு நின் களிறு (புறநா. 31)
  9. நெருக்கித் தாக்குதல். அறத்தின் மண்டிய மறப்போர்வேந்தர் (புறநா. 62)
  10. நிரம்ப உண்ணுதல். இரைமண்டி (தேவா. 72.8)
  11. சேரவிணைத்தல். காழ்மண் டெஃகம் (மலைபடு. 129)
  12. மூண்டு பொருதல். ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும் தொல். பொ. 72)
  13. கவர்தல் (W.)
  14. தாங்குதல் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be close together, crowded, pressed
  2. To move swiftly
  3. To collect topress, rush
  4. To grow vehement; to wax fierce
  5. To blaze up; to glow
  6. To increase; to become excessive
  7. To be fascinated,charmed, engrossed
  8. To thrust in
  9. To press upon, close in; to attack
  10. To eat and drink greedly
  11. To insert and fasten
  12. To oppose, resist, fight against with vehemence
  13. To snatch; to steal
  14. To support, prop



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்டுதல்&oldid=1260861" இலிருந்து மீள்விக்கப்பட்டது