உள்ளடக்கத்துக்குச் செல்

மரக்கறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மரக்கறி வெட்டும் உபகரணங்கள்

தமிழ்

[தொகு]
மரக்கறி:
மரக்கறி உணவு
மரக்கறி:
மரக்கறி சாப்பாடு
மரக்கறி:
பழங்கள்
மரக்கறி:
காய்கறிகள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மரக்கறி, பெயர்ச்சொல்.
  1. சைவ உணவு
  2. புலால் அற்ற உணவு
  3. காய்கறி
  4. சமைத்த காய்கறியுணவு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. vegetarian food/diet
  2. meatless food
  3. vegetables for curry
  4. vegetable curry/food made of cooked vegetables

விளக்கம்

[தொகு]
  • மனித உணவில் சைவம் மற்றும் அசைவம் என இருவகை...சைவ உணவை மரக்கறி என்பர்...அசைவ உணவை பொதுவாக கறிச்சோறு என்பர்...மரக்கறி என்பது மரம், செடி, கொடி, புல், பூண்டு ஆகிய தாவரங்கள் தரும் காய், பழம், இலை அதாவது கீரை, கிழங்கு, மலர், கொட்டை, விதை, தானியங்கள், சாறு ஆகியனவும் மற்றும் இவைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவுமாகும்...ஆடு, பசுமாடு, எருமை போன்ற விலங்குகள் தரும் பாலைத் தவிர, மற்றெந்த வகையிலும் விலங்குகள், பறவைகள் மற்றும் இதர உயிரினங்களோடு சம்பந்தமில்லாத உணவு மரக்கறி உணவாகும்...தயிர், மோர், நெய், வெண்ணெய், பாலடைக்கட்டி ஆகியவை பாலின் உபபொருட்களாதலால் மரக்கறி/சைவ உணவாகவே கருதப்படுகின்றன...பொதுவாக பறவைகளின் முட்டைகள் மரக்கறி உணவாகக் கொள்ளப்படுவதில்லை...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மரக்கறி&oldid=1904770" இலிருந்து மீள்விக்கப்பட்டது