மாதாகோலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மாதாகோலம்:
மாதகோலம் கேட்டுவரும் ஒரு பிச்சைக்காரன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--माता + कवल--மாதா1 (அம்மா)+ க1வல (ஒருவாய்ச் சோறு)--வேர்ச்சொல்..

பொருள்[தொகு]

  • மாதாகோலம், பெயர்ச்சொல்.
  1. பிச்சைக்காரன்
  2. ஒரு பிச்சை கேட்கும் சொல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு -
  1. beggar
  2. a begging word

விளக்கம்[தொகு]

  • இது ஒரு சென்னை வட்டார வழக்கு...இரவு நேரங்களில் பிச்சைக்காரர்கள் மாதாகோலம் என்று கூவிக்கொண்டு தெருத்தெருவாக வருவர்...ஐந்து, ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் இந்த வழக்கம் வெகுவாக இருந்தது...அன்றைய உணவை வீட்டிலுள்ளோர் சாப்பிட்டப் பிறகு, மீதமுள்ள உணவை இந்த இராப்பிச்சைக்காரர்களுக்கு அளிப்பர்...இஃதொரு--தலைப்பில் விளக்கியபடி-- சமசுகிருத கூட்டுச்சொல்லாகும்...மாதாகவல என்பது பேச்சு வழக்கில் மாதாகோலம் ஆனது...அம்மா, ஒரு வாய்ச் சோறு போடுங்கள் என்பதே இந்தச் சொல்லின் அர்த்தம்...இந்தச்சொல்லே பிச்சைக்காரர் என்று குறிப்பிடவும் வழக்கத்தில் இருந்தது...மாதகோலம் போயாச்சா?...மாதாகோலத்திற்கு போடு...மாதாகோலம் இன்னும் வரவில்லையா? என்னும் சொற்றொடர்கள் வெகுவாகவே புழக்கத்திலிருந்தன!...தற்காலத்தில் இப்படிப்பட்ட இரத்தல் காணப்படுவதில்லை
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாதாகோலம்&oldid=1394443" இலிருந்து மீள்விக்கப்பட்டது